வியாழன், 20 ஏப்ரல், 2017

ரஷ்யாவுக்கு இனி விசா தேவை இல்லை ... 18 நாடுகளுக்கு சலுகை ...இந்தியா, சீனா,வட கொரியா ,மெக்சிகோ .....

Brunei, India, China, North Korea, Mexico, Singapore, Japan, Algeria, Bahrain, Iran, Qatar, Kuwait, Morocco, UAE, Oman, Saudi Arabia, Tunisia and Turkey will be eligible to the new rules,
ரஷ்யாவுக்கு சுற்றுலா வரும் இந்தியர்கள் உள்பட 18 நாட்டினருக்கு விசா தேவையில்லை என, ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும்வகையில், ரஷ்யா அரசு துணிந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ரஷ்யா நாட்டுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரை விசா இல்லாமல் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. ரஷ்யாவில் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு நாட்டினர் அதிகம் வந்து செல்கின்றனர்.
அதையடுத்து, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் ஆகியோர் சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பாக ரஷ்யாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்வகையில் தீவிர ஆலோசனை நடத்தினர்.

அதன்பின்னர், இந்தியா மற்றும் 17 தூர கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா மற்றும் வர்த்தகத்துக்காக வரும்போது அவர்களுக்கு விசா அனுமதி தேவை இல்லை என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரதமர் மெத்வதேவ், நேற்று ஏப்ரல் 18ஆம் தேதி இதற்கான ஒப்புதலை வழங்கி, உத்தரவும் பிறப்பித்துள்ளார். இதையடுத்து, தூர கிழக்கு நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரியவருகிறது   மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: