புதன், 26 நவம்பர், 2025

விஜய்.. செங்கோட்டையனை வாண்டடாக கேட்டது ஏன்? விஜயகாந்த் எடுத்த அதே ரூட்!

 tamil.oneindia.0Rajkumar R  :  சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது/ ஏற்கனவே பல தலைவர்கள். குறிப்பாக செஞ்சி ராமச்சந்திரன், மருது அழகராஜ், காளியம்மாள் ஆகியோர் விஜய் தரப்பை அணுகிய நிலையில் அவர்கள் கட்சியில் இணைவதற்கு விஜய் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் செங்கோட்டையனை விஜய் தரப்பே அணுகி கட்சியில் சேர வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குப் பின்னணி என்ன என்பது குறித்தான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது.


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் கொங்கு மண்டலத்தின் மிக வலுவான தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். 25 வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தி வருபவர். அதிமுக வரலாற்றிலேயே அதிக முறை, அதாவது 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி ஆகிய நான்கு முதல்வர்களுக்கு கீழ் பணியாற்றியவர். இருந்த போதும், அதிமுகவில் விசுவாசத்தின் விலாசமாக இருந்தவர் செங்கோட்டையன். யாரையும் அதிர்ந்து பேசாத அரசியல்வாதி. இருந்தபோது எடப்பாடியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஆனாலும் எடப்பாடி குறித்து அவர் தற்போது வரை கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகம்
தனிப்பட்ட முறையில் ஒரு வார்த்தை கூட அவர் எடப்பாடி பற்றி பேசியதில்லை. இந்த நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு செங்கோட்டையின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தில் இணைய வெளிப்படையாகவே பேசி வந்த அதிமுகவின் மருது அழகுராஜ், நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் உள்ளிட்ட பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால் விஜயே செங்கோட்டையனை அணுகி கட்சியில் சேர நிர்வாகிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
Powered By Logo
செங்கோட்டையன் விஜய்

அதற்கு என்ன காரணம் என்பது தான் தற்போதைய அரசியலில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. உண்மையில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஒரு பழுத்த அரசியல்வாதி தேவை என்ற நிலையில் மிக அமைதியான அதே நேரத்தில் பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் இருக்கும் அவர் மிகப்பெரிய அரசியல் கூட்டங்களை நடத்தி இருக்கிறா.ர் சட்டமன்றத் தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்களில் வியூகம் வகுப்பது உள்ளிட்ட கட்சி வேலைகளை கொங்கு மண்டலத்தில் இழுத்துப் போட்டு செய்தவர்.
Recommended For You
பதவியை உதறிட்டு.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன்? விஜய் உடன் கைகோர்ப்பது உறுதி? பரபர
பதவியை உதறிட்டு.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் செங்கோட்டையன்? விஜய் உடன் கைகோர்ப்பது உறுதி? பரபர
பண்ருட்டி ராமச்சந்திரன்

விஜய்க்கு கூட்டம் கூடினாலும் அமைப்பு ரீதியாக அதனை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சிக்கல் இருக்கிறது. அதை நிவர்த்தி செய்வதும் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதும், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதும் தான் செங்கோட்டையனுக்கு தரப்பட்டிருக்கும் பொறுப்பு. அதிமுகவில் மிக வலிமையான தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது அங்கு சென்று கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும் அரசியல் வியூகங்கள் வகுக்கவும் உதவினார். தற்போது அதே பாணியில் அதிமுகவில் இருந்து மிக மூத்த பழுத்த அரசியல்வாதியான செங்கோட்டையனை தட்டி தூக்கி இருக்கிறார் விஜய் என்கின்றனர்.

கருத்துகள் இல்லை: