வெள்ளி, 3 ஜூன், 2016

நடிகன் சூர்யா குற்றத்தை ஒப்புக்கொண்டு பிரேம்குமாருக்கு மானநஷ்டம் வழங்கி மன்னிப்பு கேட்கவேண்டும்!

நடிகன்

சூர்யா பெரிய பெரிய மீடியாக்களை வைத்துகொண்டு நாடகம் ஆடுகிறார். சடன் ப்ரேக் போட்ட அந்த பெண்மணி புஷ்பா வேற சூர்யாவுக்கு தாங்க்ஸ் சொல்கிறார்.  எந்த காரணமும் இல்லாமல் தனது சினிமா பணத்திமிரும் சிக்ஸ் பக் உடம்பு திமிரும் தினவெடுக்க நிஜவாழ்வில் ஒரு கீரோ போல காட்டி கொள்ள பாவம் ஒரு ஏழை கருத்த மெலிந்த இளைஞனின் தன்மானத்தை தாக்கி உள்ளார். அதுவும் நடுரோட்டில். விகடன் பத்தரிகையில் பச்சை விபசாரதனமாக சூர்யாவின் ஹீரோ இமேஜ் கதை அளகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துணிந்து தெருவில் இறங்கி கன்னத்தில் அறைந்து அறைந்து பாடம் புகட்டினாராம். யாருக்கடா கதை விடறீங்க?  சல்மான் கான் குடித்துவிட்டு தெருவில் படுத்திருந்த ஏழைகள் மீது காரை ஒட்டி கொன்றதற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை . இரண்டிலும் ஒரே விதமான கரெக்டர்கள்தான் ஒரே விதமான சம்பவங்கள்தான்.  இவனுகளுக்கு எல்லாம்  ஏன் சமுக வலைத்தளங்கள் மீது கோபம் என்பது புரிகிறது . பெரிய மீடியாக்கள் எல்லாம் இவர்களின் பணத்துக்காக எழுத்து விபசாரம் செய்கின்ரண. சமுக வலைதளங்கள்தான்  தனிமனிதனுக்காக குரல் கொடுக்கின்றன. சூர்யாவுக்கு ஒரு வேண்டுகோள் , தவறை திருத்தி கொள்ளவிட்டால் அதற்கு உரிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும், இந்த சம்பவத்தை இலகுவில் மறக்கடிக்க முடியாது. ஏனினில் அந்த ஏழை இளைஞன் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான். உங்களை போன்றவர்களின் தவறுகள் திருத்தபடாவிட்டால் இது ஒரு பெரும் சமுக சீரழிவாக மாறிவிடும்.      

கருத்துகள் இல்லை: