சனி, 4 ஜூன், 2016

கலைஞர்: தேர்தல் ஆணையத்தில் அயோக்கியர்கள் இருக்கிறார்கள்

சென்னை: தமிழக தேர்தல் ஆணையத்தின் கண்ணியத்தின் மீது மதிப்பில்லாமல் போய்விட்டது என இன்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கருணாநிதி குற்றம்சாட்டினார். தேர்தல் ஆணையம் எவ்வளவு புனிதமானது, அதை யாரும் அசைக்க முடியாது என்பதற்கு மதிப்பில்லாமல் போகும் அளவுக்கு தேர்தல் ஆணையத்திலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள் என்றும் கருணாநிதி கடுமையாக தாக்கியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்ற 93 வது பிறந்தநாள் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், திமுகவை வீழ்த்த வேண்டும் என்று யாரோ முயற்சி செய்து வருகிறார்கள் 50 ஆண்டுகளாக எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாத இயக்கமாக திமுக இருப்பதாக கூறினார்.
என்னை இங்கே பாராட்டி பேசியவர்கள், நான் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்கள். இந்த நாட்டில் இவ்வளவு பிற்போக்கு தன்மை ஏற்பட்டுள்ளது. கொண்ட கொள்கைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டன. இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இன்னும் சில காலம் வாழ வேண்டுமா என்ற கேள்வி என்னை துளைத்தெடுக்கிறது.

என் நண்பர்களும், மற்றவர்களும் விரும்பும் காலம் வரை நான் வாழ நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை போற்ற வேண்டும் என்பதை தயவுசெய்து எண்ணி பார்த்து, அந்த கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டுடன், நம் கட்சியை வளர்க்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

யாராலும் அசைக்க முடியாது இந்த இயக்கத்தை பெரியார், அண்ணா வழியில் தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேல், நடைபெற்று எந்த கொம்பனாலும், இந்த இயக்கத்தை அசைக்க முடியாது என்ற அளவுக்கு வலிமை பெற்ற இயக்கமாக திமுக திகழ்கிறது. இந்த இயக்கத்தை விட்டுவிட்டு நாம் வேறு இயக்கத்தின் கொள்கையை பின்பற்ற போவதில்லை.
.
/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: