வியாழன், 2 ஜூன், 2016

நடிகன் சூர்யாவின் தெருவோர சினிமா.... கருப்பாகவும் ஏழையாகவும் இருப்பதுதான் குற்றமா? பிரவீன்குமாரின் புரட்சிகர கேள்வி?


கடந்த இரு நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்ட சூர்யா தாக்குதல் விவகாரம் எதிர்பார்த்த ஒரு முடிவை எட்டியுள்ளது.>சென்னை பிராட்வே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பிரவீண்குமார் (வயது 21). சுங்கத்துறை கால்பந்து அணிக்காக போட்டிகளில் விளையாடி வரும் இவர், நேற்று முன் தினம்(மே-30) தனது நண்பர் லெனினுடன் அடையாறில் உள்ள கல்லூரியில் பயிற்சியை முடித்து விட்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அடையாறு திரு.வி.க. மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தபோது, முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென்று ‘பிரேக்’ போட்டதால், எதிர்பாராதவிதமாக அந்த கார் மீது பிரவீண்குமாரின் பைக் மோதிவிட்டது.  சூர்யாவும் ரொம்ப கிரிமினலாகிட்டாறு.  பிரவீன் குமார் கூறியது போல சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமான நடவடிக்கை வேண்டும்
இதனால் காரை ஓட்டி வந்த பெண்மணிக்கும், பிரவீண்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக திரு.வி.க பாலத்தை கிராஸ் செய்ய தன்னுடைய காரில் வந்த சூர்யா, நடுரோட்டில் அந்தப் பெண்ணும், பிரவீண்குமாரும் வாக்குவாதம் செய்து கொண்டு இருப்பதைப் பார்த்து காரை விட்டு கீழே இறங்கி வந்து, அந்த பெண்ணுடன் தகராறு செய்வதைப் பார்த்து பிரவீண்குமாரின் கன்னத்தில் அறைந்தார். இதை அங்கு கூடியிருந்தவர்கள் செல்போனில் படம்பிடித்தனர். அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர்.

 பின் அது வழக்கம் போல பரபரப்பான செய்தியாக மாறியது.>இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரவீண்குமார் கூறுவது, “பைக்குக்கு அடி பட்ருச்சு, அத ரெடி பண்ணி குடுங்கன்னு அந்த மேடம்ட சொல்லிட்டிருந்தேன். அவங்க காம்ப்ரமைஸ் ஆன மாதிரி தெரிஞ்சது. அப்போ சூர்யா கார்லேந்து எறங்கி வந்து என்னன்னே கேக்காம செவுள்லயே ரெண்டு அடி அடிச்சார். அங்க இருந்த லேடீஸ்கூட சூர்யாகிட்ட, ‘ஏன் சார் அந்த பையன அடிச்சீங்க? அந்த லேடி மேலதான் மிஸ்டேக்கு’ன்னு கேட்டாங்க. ஆனா, சூர்யா அவரோட அசிஸ்டெண்ட்டை நிப்பாட்டிட்டு கார்ல ஏறி போய்ட்டார். இதுதான் உண்மை சார்.

இந்த பிரச்னையால என்னை ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு. சாஸ்திரிநகர் போலீஸ் ஸ்டேஷன்ல ஃபர்ஸ்ட் கம்ப்ளெய்ண்ட் எடுத்துக்கல. வக்கீல் வந்ததுக்கப்புறம்தான் எடுத்துக்கிட்டாங்க. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு சார். தற்கொலை பண்ணிக்கக்கூட தோணுது. எங்க வீட்ல கூட, இத வுட்டுத்தள்ளுடா... அவுங்க பணக்காரங்க. பணத்தைக் குடுத்து ஏதாவது பண்ணிட்டு உன்னைச் சாவடிச்சுடுவாங்கன்னு சொன்னாங்க சார். அது எப்படி சார்? காசு இருக்குற பெரிய நடிகன்னா யாரை வேணாலும் அடிக்கலாமா சார்? அவர் நடிகர்ங்கறதால எல்லாம் நா இப்படி பண்ணல சார். என்ன ஒருத்தர் அடிச்சுட்டா அவர் மேல கேஸ் எடுக்கணும் அவ்ளோதான் சார்

இந்தச் சம்பவத்தின்போது, சுற்றி இருந்த பெண்கள் பிரவீண்குமார் மீது தவறில்லை என்று சூர்யாவிடம் வாதிட்டதும் சூர்யா காரில் ஏறிச் சென்றுவிட்டார் என பிரவீன் குமார் தரப்பு தெரிவித்தது. இதை உடன் இருந்த போலீஸாரும் அனுமதித்துள்ளனர். சூர்யா காரை மட்டுமின்றி இடித்த பெண்மணியின் காரையும் அனுப்பி வைத்த போலீஸார், பிரவீண்குமார் மற்றும் அவருடன் இருந்த இளைஞர்களை மட்டும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று 2 மணி நேரத்துக்கும் மேலாக எந்த விசாரணையும் செய்யாமல் வைத்துள்ளனர். சூர்யா மீது நடவடிக்கை எடுக்க மறுத்த இன்ஸ்பெக்டர், பிரவீணைத் தனியாக வேனில் கூட்டிச்சென்று மிரட்டியதாகவும், பிரவீணை ஊடகங்கள் முன்பாக அப்படி பதட்டத்துடன் பேசியதற்கு இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் ஏற்பட்ட பயமே காரணம் என்றும் கூறப்படுகிறது

சூர்யா தரப்போ, ‘நடுரோட்டில் இரண்டு வாலிபர்கள் ஒரு பெண்ணிடம் தவறாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதைப் பார்த்த சூர்யா போலீஸுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, தனது உதவியாளரை அவ்விடத்திலேயே விட்டுச் சென்றதாகவும், சூர்யா இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள்தான் வேண்டுமென்றே தவறான புகாரைக் கொடுத்திருப்பதாகவும் மழுப்பலாக கூறினர்.

இந்நிலையில், தொடக்கத்திலிருந்தே இந்த பிரச்சனையை முடித்து வைப்பதில் முனைப்புடன் செயல்பட்ட போலீசார், சட்டப்பூர்வ நடவடிக்கையால் நடிகர் சூர்யாவின் பெயருக்கு களங்கம் உண்டாவதைத் தடுக்கும் வகையில், நேற்று மாலை இரு தரப்பினரையும் வைத்து சமாதானம் பேச முயன்றுள்ளனர். சரியாக 7.30 மணிக்கு பாதிக்கப்பட்ட பிரவீண் குமார் தனது பெற்றோர் மற்றும் வழக்கறிஞருடன் சாஸ்திரி நகர் காவல் நிலையத்துக்கு வர, அங்கு தயாராக இருந்த சூர்யா தரப்பினர் இந்த பிரச்சனையால் சிவக்குமார் உட்பட சூர்யாவின் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மனக்கஷ்டத்திர்கு ஆளாகியிருப்பதாக கெஞ்சும் தொனியில் பேசத் தொடங்கியுள்ளனர். வழக்கை வாபஸ் பெறுவதற்காக பண பேரத்தில் அவர்கள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பணத்தை வாங்க மறுத்த பிரவீண்குமார் இதுவே நான் சூர்யாவை தாக்கியிருந்தால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பீர்களோ அதே நடவடிக்கையை எடுங்கள் என்று போலீசாரிடம் உறுதியோடு தெரிவித்துள்ளார்.

 ஆனால், சூர்யா தரப்பினரின் தொடர் அழுத்தங்கள் காரணமாகவும், பெற்றோர்கள் பெரிய எடத்து பொல்லாப்பு வேண்டாம் என்று கெஞ்சியதாலும், வேறு வழியின்றி அவர் சூர்யாவிற்கு எதிராக கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார்.<">இது ஒரு புறம் இருக்க, பிரவீண் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த காரை ஓட்டி வந்த பெண்ணான புஷ்பா கிருஷ்ணசாமி, நேற்று இரவு 9 மணிக்கு ட்விட்டரில், பெரிய கூட்டத்திற்கு இடையில் அந்த இரு பையன்களும் மிரட்ட நான் தனியாக என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன். அவர்கள் என்னை பணம் கேட்டு மிரட்டினார்கள். என்னை காருக்குள் செல்ல அனுமதிக்காமல் கார் கண்னாடியை உடைத்து விடுவதாகக் கூறி மிரட்டினர்.

சூர்யா, நீங்கள் உங்கள் காரை நிறுத்தி அந்த பையன்களிடம் ஒரு பெண்ணை தொடக் கூடாது என்று வலியுறுத்தியதற்கு நன்றி. சரியான நேரத்தில் நீங்கள் வந்து உதவினீர்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு ரிப்ளை செய்துள்ள சூர்யா, தன்னைச் சுற்றி நடக்கும் இந்த நாடகத்திற்கு மத்தியில் தைரியமாக வந்து இதை சொன்னதற்காக புஷ்பாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே போலீசார் அங்கு வந்துள்ளனர். புஷ்பா இப்போது ட்விட்டரில் தைரியமாக கூறியதையே அவர்களிடம் ஒரு புகாராகக் கொடுத்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லது பதட்டத்தில் உடனடியாக அதை செய்ய இயலாவிட்டாலும் கூட ட்விட்டரில் இது குறித்து தாமதமாகக் கூறியதைப் போல் தாமதமாகச் சென்றாவது அதை செய்திருக்கலாம். அதே நேரம் ப்ரவீண் குமாரின் கன்னத்தில் சூர்யா அறைந்ததை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. பிரவீண் குமாரின் கன்னத்தை நோக்கி நீண்ட சூர்யாவின் கை, ஒரு வேளை பிரவீன் குமாருக்கு பதிலாக பி.எம்.டபிள்யூ-வோ, டேவிட் கூப்பரோ வைத்திருக்கும் ராக்கி அங்கு நின்றிருந்தால் அவரை நோக்கியும் நீண்டிருக்குமா? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. உண்மையில்

அது எப்படியோ எதிர்பார்த்த முடிவையே அடைந்த இந்த பிரச்சனையில், பாதிக்கப்பட்டவரான பிரவீன் குமாரின் பேச்சின் அடி நாதம் ஒன்றே ஒன்றுதான் அது “கருப்பானவர்களும் அழுக்கானவர்களும் குற்றவாளிகளா?” என்பதே.  minnambalam.com

கருத்துகள் இல்லை: