சேர்ந்துக்கிட்டு, பெட்டி பெட்டியாக பாட்டில்களை ஸ்டாக் வச்சிக்கிட்டு, அதிகாலைல இருந்து பகல் 12 மணி வரை, குவார்ட்டருக்கு 30, 40 ரூபா வீதம் அதிக விலை வச்சி, எங்கக்கிட்ட கொள்ளையடிக்கிறாங்க. இதை அதிகாரிகளும், போலீசும் கண்டுக்கிறதில்லை. இதுக்கு பதில், பார்களை மூடினால் கள்ள மார்க்கெட் விற்பனையைத் தடுக்கலாம். நாங்களும் குடிப்பழக்கத்தைப் படிப்படியா விட்டுடுவோம்'' என்றபடி அடுத்த பெக்கிற்கு போனார். அடுத்தடுத்து குடிமகன்கள் அங்கே வரத்தொடங்க, சபை களைகட்ட ஆரம்பித்தது.
;தெளிவாகப் பேசத் தொடங்கிய "குடி'மகனான முருகன் ""டாஸ்மாக் கடைகளை மூடிட்டு, அதுக்கு பதிலா கள்ளுக்கடையைத் திறப்போம்னு அரசியல் வாதிகள் சொல்லியிருந்தா, அதை குடிமகன்களும் கைதட்டி வரவேற்றிருப்பாங்க. ஆனா, ஒட்டு மொத்தமா மூடுறேன்னு சொல்றதை குடிமகன்கள் ஏத்துக்கலை. கடையை மூடச்சொல்ற பெண்கள் தான், காசை வாங்கிக்கிட்டு, அந்த அம்மாவுக்கு ஓட்டு போட்டாங்க. இல்லைன்னு சொல்ல முடியுமா? டாஸ்மாக்கை உடனே மூடமாட்டோம். கொஞ்சம் கொஞ்சமா, படிப்படியா மூடுவோம்னு ஜெயலலிதா சொன்னதாலதான், அவருக்கு ஓட்டு விழுந்திருக்கு. இது இந்த டாஸ்மாக் சரக்குமேல் சத்தியம்''’என்றார் அழுத்தமாக.
ஏற்கனவே கிக்கோடு வந்த சங்கத் தலைவர் முத்துச்சாமி, சரக்கு டம்ளருடன் பேசத் தொடங் கினார்... ""100 ரூபாய் குவார்ட்டரை 50 ரூபாய்க்கு தர்றேன்னு தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தா, இன்னைக்கு கலைஞர்தான் முதலமைச்சரா உட்கார்ந்திருப்பார்.
அந்த அளவுக்கு குடிகாரர்கள் பெருகிட் டாங்க. இனி யாராலும் குடியை விடமுடியாது. அதுனாலதான், இப்போதைக்கு டாஸ்மாக்கை மூடமாட்டோம்னு மறைமுகமாச் சொல்லி, அந்தம்மா ஆட்சியைப் பிடிச்சிருக்காங்க. அவங்க இதை மனதில் வச்சிக்கிட்டு, சரக்கு விலையைக் குறைக்கனும். அதோட தரமான சரக்கைக் கொடுக் கனும். அதிலும் நாங்க கேட்கிற சரக்கை கொடுக்க ணும். மட்டமான சரக்கைக் கொடுத்து, குடி காரர்களின் ஆயுளுக்கு அரசு வேட்டு வைக்கக் கூடாது. அதுதான் எங்க வேண்டுகோள்''’என்றார் சிக்ஸ்டிபைவை கடித்தபடி.;">அரசு தள்ளாடாமல் இருக்க... தள்ளாடும் குடிமகன்களின் ஆதரவு தேவையோ? -சக்தி .நக்கீரன்,இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக