வெள்ளி, 3 ஜூன், 2016

திருப்பூரில் நைஜீரியர்களால் அடிதடி மோசடி... சட்டவிரோதமாக பல காரியங்கள்?

திருப்பூர்: இந்தியாவில் ஆப்பிரிக்க குடிமக்கள் ஆங்காங்கு தாக்குதலுக்குள்ளாகி வருவது பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் ஆப்பிரிக்க குடிமக்கள் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்களும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. உண்மையில் ஆப்பிரிக்க மக்களால் நமக்கு பிரச்சினைகள் எழுகிறதா?.. திருப்பூரிலேயே அதற்கு ஒரு விடை உள்ளது. திருப்பூரில் உள்ள ராயபுரம் பகுதி சமீப ஆண்டுகளாக தொடர்ந்து டென்ஷனில் உள்ளது. காரணம், அங்கு வசித்து வரும் நைஜீரிய நாட்டவர்கள். இவர்களை காலி செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட திருப்பூர் முழுவதுமே நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏன் இந்த நைஜீரியர்கள் மீது திருப்பூர்வாசிகளுக்கு இத்தனை கோபம்...? காரணம், இவர்கள் பல்வேறு சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுவதால் பொது அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அபாயம் இருப்பதாக திருப்பூரைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.
1000 பேர் திருப்பூரில் கிட்டத்தட்ட 1000 நைஜீரியர்கள் வரை தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ராயபுரம் பகுதியில் உள்ளனர்.
பனியன் வியாபாரம் நைஜீரியாவிலிருந்து இங்கு வியாபார நிமித்தம் வந்த இவர்கள் காதர்பேட்டை பகுதியில் தங்களது தொழிலை நடத்தி வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள வீடுகளை வாடகைக்குப் பிடித்து தங்கியுள்ளனர். கிட்டங்கிகளையும் வைத்துள்ளனர்.
முறைகேடு ஆனால் இவர்கள் முறைகேடாக தங்கியிருப்பதாக திருப்பூர் பனியன் உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது. இதுகுறித்து அந்த சங்க நிர்வாகிகள் கூறுகையில், வியாபாரத்துக்கு வந்த நைஜீரியர்கள் காதர்பேட்டையில் நீண்ட நாட்களாக முறைகேடாகத் தங்கிக்கொண்டு தொழில் செய்கின்றனர். இதனால் இரண்டாம் நிலை பனியன் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் தமிழ் நாட்டு மக்களுக்கான கலாசார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
மோசடி - அடிதடி இவர்களுடனான வியாபாரத்தில் தொடர்ந்து சட்டரீதியான பிரச்சனைகள், மோசடிகள் அடிக்கடி ஏற்பட்டு சண்டைகள் என பல பிரச்னைகள் காதர் பேட்டையில் நடப்பதால் எங்களுடைய வியாபாரமும் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நைஜீரியர்கள் காதர் பேட்டையில் கடை வைத்து நடத்துவதை தடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகிறார்கள்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் திருப்பூரில் தங்கியுள்ள நைஜீரியர்கள் பல்வேறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதால் பெண்கள், குழந்தைகளுக்குப் பல வகையான சிக்கல்கள் வருவதாக கூறி அங்கு பலமுறை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்துள்ளது. அதில் நைஜீரியர்களை திருப்பூரை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து தீர்மானமும் போடப்பட்டுள்ளது.
வீடுகளை வாடகைக்கு விட எதிர்ப்பு மேலும் நைஜீரியர்களுக்கு திருப்பூரில் யாரும் வீடு தரக் கூடாது, வணிகம் செய்ய இடம் தரக் கூடாது என்றும் கூட அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் தீர்மானம் போட்டுள்ளனர். இதற்கு ஒத்துழைக்காத வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடோன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவ்வப்போது கைது போலீஸாரும் சட்டத்திற்குப் புறம்பாக இங்கு தங்கியிருக்கும் நைஜீரியர்களை அவ்வப்போது கைது செய்தபடிதான் உள்ளனர். ஆனால் முழு அளவில் நைஜீரியர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் போலீஸார் உள்ளனராம். காரணம், தூதரக அளவில் அவர்களுக்கு வரும் பிரஷர் என்று திருப்பூர் பனியன் ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Read more at: //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: