ஜெயலலிதா
சொத்துக்குவிப்பு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றன.
பி.வி. ஆச்சார்யாவின் வாதம் நிறைவு பெற்றது. சுப்பிரமணிய சாமியின் வாதம்
எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கர்நாடக அரசு
தனது தரப்பு வாதத்தை நிறைவு செய்தது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடியே ஒரு லட்சம் அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி 10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்கா தீர்ப்பளித்தார். காண்டேயினர் கரன்சிகளை இந்த வழக்கில் சேர்க்க முடியாது. அதை பின்பு ஜெயாவோடு , மோடி,அருண்ஜெட்லி மாற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் எதிர்கால சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கலாம் என்று மக்களுக்கு பரிந்துரை செய்கிறோம் ..
இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விசாரித்து, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரை வழக்கிலிருந்து விடுதலை செய்து கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். இதில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் இறுதி வாதம் நடைபெற்று வருகிறது. கர்நாடக தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே 4 நாட்களும், அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 5 நாட்களும், ஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ் 4 நாட்களும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே 4 நாட்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இதை தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 6 நாட்கள் பதில் வாதத்தை முன்வைத்தார். இதன்பின், வழக்கு விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அன்றே அனைத்து தரப்பு வாதங்களும் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதை தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமித்தவா ராய் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, தனது எதிர் பதில் வாதத்தை இன்று தொடங்கினார். அப்போது அவர், ’’குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும், தங்களுக்குள் மாறி மாறி பணத்தை கடனாக பெற்று சொத்துக்களை வாங்கியதாக கூறியுள்ளனர். கடந்த 1996ம் ஆண்டு சுப்பிரமணியசாமி தொடர்ந்த வருமான வரி தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 4 மாதம் கழித்துதான், குற்றவாளிகள் தரப்பில் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் பிறழ் சாட்சியாக மாறியுள்ள பலர், அரசு உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான், வருமான வரி தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்தார்கள் என்பதற்காக, அது சட்டபடி சம்பாதித்த வருமானம் ஆகாது. அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். வழக்கில், அடிப்படை குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டியதுதான் அரசின் கடமை. அதுபோல வழக்கில் அடிப்படை குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்பதை அரசு நிரூபித்து விட்டால், அதன்பின்னர், தாங்கள் நிரபராதிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் நிரூபிக்க வேண்டும்’’என்று வாதிட்டார். nakkheeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக