திங்கள், 30 மே, 2016

வேந்தர் மூவிஸ் மதன்....காணவில்லை ... காசியில் சமாதி அடையப்போவதாக கடிதம்....

குறுகிய காலத்தில் தமிழ் சினிமா உலகை பரபரப்புக்கு ஆளாக்கிய பெயர் வேந்தர்  மூவிஸ் மதன். சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் யார் இந்த மதன் என்று எல்லோரும் புருவத்தை உயர்த்தி கேள்வி கேட்கக்கூடிய அளவிற்கு பிரபலமான நபராக உலாவந்த இந்த மதன் என்பவரை காணவில்லை என இப்போது மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது.<>சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல கல்வி நிறுவனமான எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் வேந்தர் எஸ்.ஆர்.பச்சமுத்து என்ற பாரிவேந்தர் தங்க தேரில் அமர்ந்திருப்பதை போன்ற லோகோவுடன் வேந்தர் மூவிஸ் நிறுவனத்தை துவக்கி திரைப்படங்கள் தயாரித்ததுடன், பட விநியோகத்தையும் செய்து வந்தார் இந்த மதன். பிரபல கல்வி அதிபரான பாரிவேந்தருடைய  நெருங்கிய  உறவினரா என்று  பலரும் சந்தேகத்திற்கிடமான வகையில்  பேசி வந்தநிலையில் இவருடைய பூர்வீகம் என்ன? இவர் எப்படி பாரிவேந்தரின் நல்லெண்ணத்தை பெற்று  கோடீஸ்வரராக உயர்ந்தார் என்பது குறித்த தகவல்கள் ஊடகங்களில்  வெளிவரத் தொடங்கி உள்ளது.


நாகர்கோயிலை சேர்ந்த மின்வாரிய ஊழியர் பாலகிருஷ்ணன் என்பவருடைய மூத்த மகன் தான் மதன் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.  இவருடைய உண்மையான பெயர் பாலசந்தர். பள்ளியில் படிக்கும் போதே  பல்வேறு புகார்களுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக நாகர்கோயில் காவல் நிலையத்தில் இவர் மீது பல புகார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 நிறைய புகார்கள் வந்தவுடன் தன்னுடைய பெயரை எஸ்.மதன் என்று மாற்றியதுடன்,
தான் பெங்களூரில் பிறந்ததாக போலி சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை பெற்றதாகவும் தெரிய வருகிறது.  மதுரையில் இளங்கலை படிப்பு படித்த போது கல்லூரியில் ஏற்பட்ட ஒரு தகராறு காரணமாக அங்கிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் அங்கு அவரோடு படித்த பாலகுருநாதன் என்பவரோடு சேர்ந்து தவறான திசையில்
சென்றதாக கூறப்படுகிறது.

 இங்கு நெருக்கடி அதிகமாகவே ஒரு கட்டத்தில் மும்பைக்கு ஓடிப்போய்   செட்டிலான மதன். அங்கே என்ன தொழில் செய்தார் என்ற விவரம் தெரியவில்லை.  பின்னர்  சென்னை திரும்பிய மதன் எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகத்துடனும், அதன் வேந்தர் பச்சமுத்து என்ற பாரிவேந்தருடனும் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டு  இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மெடிக்கல் சீட் வாங்கி தருவதற்கான  ஒரு ஏஜென்சியை தொடங்கி பல கோடி ரூபாய்  சம்பாதித்திருக்கிறார்.
இதன் பின்னர்தான் தங்க தேரில் பாரிவேந்தர் அமர்ந்திருப்பது போன்ற படத்தை லோகோவாக போட்டு வேந்தர் மூவிஸ் என்ற  பட நிறுவனத்தை தொடங்கி திரைப்பட துறையில் ஜாம்பவானாக  வலம்  வந்துள்ளார்.
மிகப்பெரிய தொழிலதிபர் போல வலம்வந்த மதன், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியிலும் ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறார். 2011-ம் ஆண்டு திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக இவர் போட்டியிட்டுள்ளார்.
 3 மனைவிகள், 2 பெண் தோழிகள்  அவர்களுக்கு ஆடம்பர பங்களாக்கள் என சொகுசு வாழ்க்கை  வாழ்ந்த மதன், தற்போது தனக்கும், பாரிவேந்தர் குடும்பத்தினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து  தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மதன் எழுதியதாக  ஒரு கடிதம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.  தன்னுடைய நண்பர்களுக்கும், பாரிவேந்தருக்கும், குடும்பத்திற்கும்  தெரிவிப்பதாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு எழுதி உள்ள அந்த கடிதத்தில், ஒரு மனிதனின் வாழ்வு பூஜ்ஜியத்தில் தொடங்கி பூஜ்ஜியத்திலேயே முடிகிறது.என்னுடைய வாழ்க்கையும் அப்படி கடைசியில் முடிய போகிறது. காசியில் உள்ள கங்கையில் சமாதி அடைகிறேன் என்று  குறிப்பிட்டு  5 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதம் அவர் கைப்பட எழுதியதாக  வேந்தர் மூவிஸ் அலுவலக லேட்டர்பேடில்  வந்துள்ளது.   .maalaisudar.com
 S. Madhan, Managing Partner of Vendhar Movies, has gone missing since Sunday. In a letter that’s rumoured to be written by him, it has been revealed that he’s going to Kasi where he plans to attain Samadhi. While it’s not yet known if the information in that letter is authentic or was it really written by Madhan, it has been confirmed that he has absconded. In his letter, he added that those who have given him money for admission in SRM Group of Institutions can get it back from the management. Founded in 2011 by Madhan himself, Vendhar Movies first production venture was 2012’s Aravaan, starring Aadi Pinisetty, and since then they had distributed several films such as Saguni, Kutti Puli, Ethir Neechal, Aarrambam and Pandiya Nadu among other films. The company had also produced films such as Thillu Mullu, Pulipaarvai and Paayum Puli. Sources close to Madhan have confirmed to TNM that he’s missing since Sunday and the news has shocked them.

கருத்துகள் இல்லை: