லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலின்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி
இரானியை பாஜக தனது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
2017ம் ஆண்டு உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து பாஜகவின் கவனம் எல்லாம் உத்தர பிரதேசம் பக்கம் திரும்பியுள்ளது. உத்தர பிரதேசத்தின் பாஜக முதல்வர் வேட்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது>பிரதமர் நரேந்திர மோடியின் குட்புக்கில் இருக்கும் ஸ்மிருதி உ.பி. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என பாஜக வட்டாரங்கள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளன. போர்ஜரி செர்டிபிகேட் பிரதமர்.... போர்ஜரி செர்டிபிகேட் முதலமைச்சர்?
ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அடங்கிய கோஷ்டி ஸ்மிருதியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் உத்தர பிரதேச மாநில பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஸ்மிருதி முதல்வர் வேட்பாளராவது பிடிக்கவில்லை. 2014ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியிடம் தோல்வி அடைந்த ஸ்மிருதி வேண்டாம். அவருக்கு பதில் வருண் காந்தியை முதல்வர் வேட்பாளர் ஆக்கினால் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்.
உத்தர பிரதேச மாநில கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்தை முன்வைத்து ஸ்மிருதியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு ராஜ்நாத் சிங் எதிர்ப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. tamiloneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக