ரோம்:
லிபியாவில்
உள்நாட்டு போர் நடைபெறுவதால் அங்கிருந்து வெளியேறும் பொதுமக்கள் படகுகள்
மூலம் புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அவர்கள்
வரும் வழியில் படகுகள் கடலில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற
சம்பவம் இத்தாலி கடல் பகுதியில் சமீபத்தில் நடந்தது. லிபியாவில் இருந்து 3
படகுகளில் 800-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு வந்தனர். மத்திய தரைக்கடலில்
வந்தபோது படகுகளின் என்ஜின்களில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் படகுகள் கடலில் மூழ்கின. அப்போது அங்கு ரோந்து சுற்றிவந்த இத்தாலி கடற்படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 3 படகுகளில் வந்த 79 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.
15 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டன. 3 படகுகளில் வந்த 40 குழந்தைகள் உள்பட 700 அகதிகள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகறது.
இத்தகவலை ஐ.நா. அகதிகள் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அகதிகளை சட்டவிரோதமாக அழைத்து வந்ததாக சூடானை சேர்ந்த 28 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக