ஜூன் 2016":
உத்தரப் பிரதேச மாநிலத்தில்,
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு
போலீஸ் அதிகாரிகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.கொல்லப்பட்டவர்களில், மதுரா நகர போலீஸ் கண்காணிப்பாளர்
முகுல் திவேதி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் யாதவ் ஆகியோரும்
அடங்குவார்கள்.
இந்த வன்முறையில், நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உத்தரப் பிரதேச காவல்துறை தலைவர் ஜாவித் அஹமது தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தபோது இந்த வன்முறை ஏற்பட்டதாக போலீஸ் தரப்பு பேச்சாளர் தலித் செளத்ரி தெரிவித்தார்.வியாழக்கிழமை மாலை போலீசார் இந்த நடவடிக்கையில் இறங்கியபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலில் போலீசார் மீது கற்களை வீசித் தாக்கியதாகவும், பின்னர் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை நள்ளிரவு வரை 12 சடலங்களை மீட்டிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துவக்கத்தில், பாபா ஜெயகுருதேவ் ஆதரவாளர்கள் என்று கூறி செயல்பட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் பாரத சட்ட அமைப்பு என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வந்தார்கள்.bbc.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக