
கேரள மாநிலத்தில் நடைபெற்ற அன்பின் முத்தம் போராட்டத்தை முன்னின்று நடத்திய மாடல் அழகி ரேஷ்மி, இணையதளம் மூலம் விபசாரம் நடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவரது கணவரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் நடைபெறும் இணையவழி விபசாரம் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக 11 பேரை கேரள போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கேரளாவில் நடைபெற்ற அன்பின் முத்தம் போராட்டத்தை முன்னின்று நடத்திய ரேஷ்மி ஆர், நாயர் மற்றும் அவரது கணவர் ராகுல் புஷ்பாலன் ஆகியோர் விபசாரம் செய்ததாக கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் முகநூலில் 'கொச்சு சுந்தரிகள்' என்ற பெயரில் ஒரு பக்கத்தை தொடங்கி அதன் மூலம் விபசாரம் செய்ததாக தெரிகிறது. ரேஷ்மி தவிர காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி அக்பரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் சைபர் க்ரைம் போலீஸார் பல்வேறு சமூக வலைத்தல நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக