புதன், 18 நவம்பர், 2015

சுப்ரீம் கோர்ட்டில் அன்பழகன் பதில் மனு.. குன்ஹவின் தீர்ப்ப்பை உறுதி செய்க...குமாரசாமி தீர்ப்பில் கணிதப்பிழை..

டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஹைகோர்ட் தீர்ப்பில் கணித பிழை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. ஆனால் விசாரணை நடத்திய ஹைகோர்ட், ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்தது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுகவின் அன்பழகன் தரப்பு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில், இன்று அன்பழகன் மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் சொத்து மதிப்புகளை கணக்கிட்டு ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கியதில் தவறு உள்ளது. பெங்களூர் சிறப்பு நீதிமன்ற, நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். எனவே அதையே கணக்கில்கொள்ள வேண்டும் என்று மனுவில் அன்பழகன் தெரிவித்துள்ளார். Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: