திங்கள், 16 நவம்பர், 2015

ராகுல் காந்தி பிரித்தானிய பிரஜை...சுப்ரமணியம் சாமி குற்றச்சாட்டு....

ராகுல் காந்தி தன்னை இங்கிலாந்து குடிமகனாக அறிவித்துக்கொண்டதாக சுப்ரமணியன் சுவாமி கூறியது முற்றிலும் தவறானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:- ராகுல் காந்தி பிறந்ததில் இருந்து  இந்திய குடியுரிமையை மட்டும்தான் வைத்துள்ளார். அதேபோல், இந்திய பாஸ்போர்ட்டை மட்டுமே வைத்துள்ளார். பிற எந்த நாட்டின் குடியுரிமையையும் அவர் பெற்றிருக்கவில்லை. பீகார் தேர்தலில் அடைந்த தோல்வியாலும், மூத்த தலைவர்கள் அதிருப்தி குரலாலும் விரக்தியடைந்துள்ள பாரதீய ஜனதா,  பிரச்சினையை திசை திருப்பவே ராகுல் காந்தி குறித்து பொய்யான தகவலை  சுப்ரமணியன் சுவாமி தலைமையில் வெளியிட்டுள்ளது. சுப்ரமணியன் சுவாமி,  மலிவான அரசியல் விளம்பரத்திற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  இது போன்ற  மலிவான உத்திகளையும், முற்றிலும் தவறான தகவல்களையும் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகின்றார்” என்று தெரிவித்தார். சுப்ரமணியம் சாமி காங்கிரசில் சேரப்போகிறார் என்ற சந்தேகம் நமக்கு வர்றது...என்னாக்க ராகுல் அரசியலை விட்டு விலகினா காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் நிச்சயமாக உண்டு.....இவரு காங்கிரசை காப்பாற்ற எடுக்கும் முயற்சிதான் இது....சு.சாமி பாணியில அரசியல் பேச நம்பளுக்கும் தெரியும்லே! 


முன்னதாக, ரராகுல்காந்தி பிரிட்டன் நாட்டு குடிமகன் என்றும் அவரது இந்திய நாட்டு குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று தெரிவித்திருந்தார். பிரிட்டனில் ராகுல்காந்தி பங்கு தாரராக இருந்த பேக்ஸ் காப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், அவர் ஒரு பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி கூறினார். இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதமும் அவர் எழுதியிருந்தார்  dailythanthi.com

கருத்துகள் இல்லை: