
எழுதியுள்ளார். பாட்னாவில் நடைபெறும் உங்கள் தலைமையிலான மந்திரிசபையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று உங்களை நேரில் வாழ்த்துவதற்கு மிகவும் விரும்பினாலும், அன்றைய தினம் சென்னையை விட்டு வரஇயலாத சூழ்நிலையில் உள்ளேன். எனது மனைவி தயாளு அம்மையார் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை.
எனது சார்பில் தமிழக முன்னாள் முதல் மந்திரியும், தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலினை பாட்னாவுக்கு அனுப்பி வைக்கிறேன். இந்திய ஜனநாயக வரலாற்றில் வெகுசிறப்பு வாய்ந்ததாக இந்த பதவியேற்பு விழா அமையவும், உங்கள் தலைமையிலான மந்திரிசபை பீகார் மாநில மக்களின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் பதவிக்காலம் முழுமையையும் அர்ப்பணித்து மகிழ்ச்சியாக செயல்படவும் மனமார வாழ்த்துகிறேன் என தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக