சனி, 21 நவம்பர், 2015

படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்த ...மீனாட்சி

தமிழில் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீனாட்சி. இப்படத்திற்கு பிறகு ‘டி.என்.07 ஏ.எல்.4777’, ‘ராஜாதி ராஜா’, ‘மந்திர புன்னகை’, ‘அகம் புறம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான ‘வெள்ளக்கார துறை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இவர் தற்போது ‘நேர்முகம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படப்பிடிப்பின்போது படத்தின் உதவி இயக்குனரை மீனாட்சி தாக்கியுள்ளார். உடனே அவர் மயக்க நிலைக்கு சென்றிருக்கிறார். இதை பார்த்த படக்குழுவினர் உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்ததற்கு மன்னிப்பு கேட்கும் வரை அவர் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று சிறை பிடித்தனர். பின்னர் மீனாட்சி படப்பிடிப்பில் இவ்வாறு நடந்ததற்கு மிகவும் வருந்துகிறேன் என்று கூறி மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அதன் பின்னரே படக்குழுவினர் சமாதானம் ஆகியிருக்கிறார்கள்.
படப்பிடிப்பில் உதவி இயக்குனரை அடித்தது படக்குழுவினர் மற்றும் திரையுலத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: