புதன், 18 நவம்பர், 2015

சிரியா அகதிகளை அனுமதிக்க மறுப்பு 20க்கும் அதிக அமெரிக்க மாகாணங்கள்

வாஷிங்டன்: பாரீஸ் தாக்குதல்களை அடுத்து சிரியாவை சேர்ந்த அகதிகளை அனுமதிப்பது இல்லை என்று அமெரிக்காவில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாகாண ஆளுநர்கள் அறிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 129 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் சிரியாவில் இருந்து அகதிகளோடு அகதியாக கிரீஸ் வந்து அங்கிருந்து பாரீஸ் வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த அகதிகளை அனுமதிப்பது இல்லை என அமெரிக்காவில் உள்ள அலபாமா, மிஷிகன், டெக்சாஸ், அர்கன்சாஸ், லூசியானா உள்பட 20க்கும் மேற்பட்ட மாகாணங்களின் ஆளுநர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இன்டியானா, மிசிசிப்பி, இலினாய்ஸ், மசாசுசெட்ஸ், புளோரிடா, வடக்கு கரோலினா, கன்சாஸ், கென்டுக்கி, டென்னிஸி, தென் கரோலினா மாகாண ஆளுநர்களும் சிரிய அகதிகளை தங்கள் மாகாணங்களுக்குள் அனுமதிப்பது இல்லை என்று அறிவித்துள்ளனர். தங்கள் மாகாண மக்களின் வாழ்க்கைக்கு ஆபத்து வர ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர். நியூஹாம்ப்ஷயர் மாகாண ஆளுநர் மேகி ஹஸன் தான் சிரிய அகதிகளை அனுமதிக்க மாட்டோம் என முதலில் தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: