சனி, 21 நவம்பர், 2015

ஓசைப்படாமல் உதவும் தனியார் அமைப்புகள்: ஒருங்கிணைக்க மாநகராட்சி முன்வராதது ஏன்? செயல்பட தெரியாமல் திரு திருவென முழித்த நிர்வாகம்...

சென்னை: மழை வெள்ளத்தால் சீர்குலைந்துள்ள சென்னை நகரத்தில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, பல்வேறு தனியார் அமைப்புகள் ஓசையின்றி களப்பணி ஆற்றி வருகின்றன. அந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து, உதவிகளை பெற, மாநகராட்சி முன்வரவில்லை.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாநகராட்சி நிர்வாகம், நிவாரண பணிகளை செய்து வருகிறது. மாநகராட்சியின், 23 ஆயிரம் பணியாளர்கள், குடிநீர் வாரியம் உட்பட பல்வேறு இதர அரசு துறைகளின் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக, மாநகராட்சி தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்டோருக்கு உணவு, உறைவிட வசதி போன்றவற்றை மாநகராட்சி அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தற்போதைய பாதிப்பிற்கு, அவை மட்டுமே போதுமானதாக இல்லை. வெள்ள பாதிப்பில் உடைமைகளை இழந்து, உணவின்றி, குளிர் தாங்காமல், உறங்க முடியாமல் தவிப்போருக்கு, அந்தந்த பகுதி நலச்சங்கங்கள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என, பல்வேறு அமைப்புகளும், தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன.  அம்மா தாயே புரட்சி தலைவி தெய்வமே பாதாதி கேசம் சூர்யப்பிரகாசம் பரிபூர்ண சந்திரோதயம் கருணா கடாட்சம்  வெளக்கெண்ணே...இதுக்கே நேரம் போயிடுச்சு
அந்த அமைப்புகளை ஒருங்கிணைக்கவோ, அவை என்னென்ன வகையான உதவிகளை செய்துள்ளன என்பது போன்ற விவரங்களை சேகரிக்கவோ, மாநகராட்சி முயற்சி செய்யவில்லை. எத்தனை அமைப்புகள், வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன என்ற விவரம் கூட, மாநகராட்சியிடம் இல்லை.'அனைவரும் அந்தந்த பகுதியில் முடிந்தவரை உதவி செய்கின்றனர்' என, பொத்தாம் பொதுவாகவே மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுபோன்ற பேரிடர் காலத்தில் பணியாற்றக்கூடிய அமைப்புகளை அடையாளம் கண்டு, அந்த அமைப்புகளின் பணிகளை அரசு பாராட்டினால் மட்டுமே, எதிர்காலத்தில் சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.மாறாக, 'நாங்களே சிறப்பாக பணியாற்றுகிறோம்; எந்த அமைப்பின் பணிகளும் எங்களுக்கு தேவையில்லை; எந்த தனியார் அமைப்பின் பணிகளையும் நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம்' என்ற ரீதியில் மாநகராட்சி செயல்படுவது, சமூக பணிகளை மட்டம் தட்டும் செயலாகவே கருதப்படுகிறது.இதுபோன்ற சூழலில், மாநகராட்சி ஒருங்கிணைப்பு இல்லாமல், அந்தந்த பகுதியில், அவரவர் செய்யும் உதவிகள் என்பது, உண்மையில் பாதிக்கப்பட்டோருக்கு போய்ச் சேருமா என்பதும், தனியார் உதவிகளை பெறுவதன் மூலம், அரசுக்கு நிவாரண பணிகளில் ஆகும் செலவு ஓரளவாவது குறையும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

கேட்டு வாங்கும்புறநகர் உள்ளாட்சிகள்!

வெள்ள நிவாரண பணிகளில், புறநகர் உள்ளாட்சிகள், தனியார் அமைப்புகளை தொடர்பு கொண்டு, பல உதவிகளை கேட்டு வாங்குகின்றன. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட முடிச்சூர், பெருங்களத்துார் பகுதிகளில், 'இந்திய சுற்றுச்சூழல் கூட்டமைப்பு' சார்பில், மெழுகுவர்த்தி, போர்வை, ரொட்டி பொட்டலம், பால் பாக்கெட், தண்ணீர் பாட்டில், தீப்பெட்டி, டார்ச் லைட் ஆகியவை அடங்கிய நிவாரண பைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நடிகரை அலைக்கழித்த மாநகராட்சி:

நேற்று முன்தினம், சென்னை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்பு கொண்டு, 'வெள்ள நிவாரண உதவி செய்ய வேண்டும். யாரை தொடர்பு கொள்வது' என, கேட்டுள்ளார். அவருக்கு முறையான பதில் சொல்லாமல், அடுத்தடுத்த அதிகாரிகளின் எண்ணை கூறி, அலைக்கழித்துள்ளனர். சிவகார்த்திகேயன் போன்று, சென்னையில் உதவி செய்யும் எண்ணத்தில் உள்ள பலரும், மாநகராட்சியை தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு முறையான பதிலை மாநகராட்சி தான் அளிப்பதில்லை  தினமலர்.com

கருத்துகள் இல்லை: