சனி, 21 நவம்பர், 2015

அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் குறித்து கணக்கெடுப்பு வேண்டும்” ஜனாதிபதி வேட்பாளர் Trump Donald

குடியரசு கட்சி சார்பாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ”பாரீஸ் தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்காவில் பல விடயங்களை கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் வசித்து வரும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை சேகரிப்பதுடன் அவர்களின் முகவரிகள், பணியிடங்கள் உள்ளிட்ட தகவல்களையும் கணக்கெடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். மேலும், தான் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால், இதனை கட்டாயமாக செயல்படுத்துவேன் என கூறியுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் இந்த கருத்து பல தரப்பினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, ஜெர்மனியை அடால்ஃப் ஹிட்லர் ஆட்சி செய்தபோது யூதர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உத்தரவிட்ட சர்வாதிகார போக்கையே இது காட்டுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். webdunia.com

கருத்துகள் இல்லை: