சனி, 21 நவம்பர், 2015

பாரிஸ் 132 பேர் பலியான தாக்­கு­தல்­க­ளுக்கு திட்டம் தீட்­டிய சூத்­தி­ர­தா­ரி­யை எப்படி நெருங்கியது காவல்துறை? விடியோ...

பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை 132 பேர் பலி­யா­வ­தற்குக் கார­ண­மான தாக்­கு­தல்­க­ளுக்கு திட்டம் தீட்­டிய சூத்­தி­ர­தா­ரி­யான அப்­டெல்­ஹமீட் அபா­யோ­வுத்தை தேடி பொலிஸார் மாடிக் கட்­ட­ட­மொன்றில் புதன்­கி­ழமை அதி­காலை மேற்­கொண்ட தேடுதல் நட­வ­டிக்­கையின் போது தற்­கொலைக் குண்­டுத் ­தாக்­கு­தலை நடத்­திய பெண் தொடர்­பான தக­வல்கள் வியா­ழக்­கி­ழமை வெளி­யா­கி­யுள்­ளன. ஐரோப்­பாவின் முத­லா­வது பெண் தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யான அந்தப் பெண், அப்­டெல்­ஹமீட் அபா­யோ­வுத்தின் (27 வயது) மைத்துனியான ஹஸ்னா அயித்­போ­லச்சன் என மேற்­படி உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற தக­வல்கள் கூறு­கின்­றன.
இது­வரை காலமும் அப்­டெல்­ஹமீட் அபா­யோவுத் சிரி­யா­வி­லி­ருந்து ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தல்­க­ளுக்கு வியூகம் வகுத்து வந்ததாக நம்­பப்­பட்டு வந்­தது.
ஆனால் கைய­டக்கத் தொலை­பேசி அழைப்­பு­க்களை குறுக்­கீடு செய்­ததன் மூலம் பெறப்­பட்ட புல­னாய்வுத் தக­வல்கள் மூலம் அவர் பிரான்ஸில் இருப்­பது அறி­யப்­பட்­ட­தாக பாரிஸ் நகர விசா­ர­ணை­யாளர் பிரான்­கொயிஸ் மொலின்ஸ் தெரி­வித்தார்.
இந்தத் கைய­டக்­கத்­தொ­லை­பேசி அழைப்­புக்கள் தொடர்­பான புல­னாய்வுத் தகவல் பெறப்­பட்டு 20 நிமி­டங்­களில் பாரிஸ் நகரின்
புற­ந­கரப் பகு­தி­யான செயின்ட் டெனி­ஸி­லுள்ள குறிப்­பிட்ட குடி­யி­ருப்பு மாடிக் கட்­ட­டத்தை 100 க்கு மேற்­பட்ட ஆயுதந் தாங்­கிய பாது­காப்புப் படை­யினர் முற்­று­கை­யிட்­டனர்.
இத­னை­ய­டுத்து அந்­ததக் கட்­ட­டத்­தி­லி­ருந்த தீவி­ர­வா­தி­க­ளுக்கும் பாது­காப்பு படை­யி­ன­ருக்­கு­மி­டையே உக்­கிர துப்­பாக்கிச் சமர் இடம்பெற்றுள்­ளது.
சுமார் ஒன்­றரை மணி நேரம் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சம­ரை­ய­டுத்து பெண் தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யான ஹஸ்னா அந்தக் குடி­யி­ருப்புக் கட்­ட­டத்தின் மூன்­றா­வது மாடி ஜன்­ன­லொன்றில் தோன்றி பாது­காப்புப் படை­யி­னரை நோக்கி உதவி கோரி கூச்­ச­லிட்டுள்ளார்.
இந்­நி­லையில்¸ அந்தப் பெண் முகத்தை மறைத்­த­வாறு நின்­றி­ருந்­ததால் அவ­ரது ஆள­டை­யா­ளத்தைக் காண்­பிக்­கு­மாறு அவரை பாது­காப்புப் படை­யினர் கோரி­யுள்­ளனர்.
showImageInStory1  மூன்றாம் மாடி ஜன்­னலில் நின்­ற­வாறு படை­யி­னரை நோக்கி உதவி கோரி கூச்­ச­லிட்ட பெண் தற்­கொலைக் குண்­டு­தாரி showImageInStory1
ஆனால் அந்தப் பெண் தனது முகத்தைக் காண்­பிக்­காது கைகளை மட்டும் மேலே உயர்த்­தி­யுள்ளார்.
அவர் பின்னர் கைகளை பாது­காப்புப் படை­யி­னரின் பார்­வை­யி­லி­ருந்து மறைக்­கவும் படை­யினர் அந்தப் பெண்ணை கைகளை உயர்த்­து­மாறு உத்­த­ர­விட்­டுள்­ள­துடன் அவ்­வாறு செய்­யா­விட்டால் துப்­பாக்கிச்சூட்டை நடத்த நேரிடும் என என எச்­ச­ரிக்கை விடுத்­தனர்.
ஆனால்¸ அவரோ படை­யி­னரின் உத்­த­ர­வுக்கு செவி­சாய்க்­காது அவர்­களை நோக்கி துப்­பாக்கிச் சூட்டை நடத்த ஆரம்­பித்­துள்ளார்.
இந்­நி­லையில்¸ அந்தக் குடி­யி­ருப்புக் கட்­ட­டத்­துக்கு எதி­ரி­லி­ருந்த கூரை­யி­லி­ருந்து பொலிஸார் துப்­பாக்கிச் சூட்டை நடத்­தினர்.
இதன்­போது பாரிய குண்டு வெடிப்பு சத்தம் கேட்­டுள்­ளது. அந்தப் பெண் தற்­கொலைக் குண்­டு­தாரி தனக்குத் தானே குண்டை வெடிக்க வைத்து உயி­ரி­ழந்­துள்ளார்.
இந்த சம்­ப­வத்தில் அப்­டெல்­ஹமீட் அபா­யோ­வுத்தும் உயி­ரி­ழந்­துள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரிஸ் நக­ரி­லுள்ள தேசிய விளை­யாட்டு மைதானம், மதுச்­சா­லைகள் மற்றும் உண­வ­கங்­களை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட தாக்­குதல் சந்­தேக நபர்­களை தேடி மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் தேடுதல் நட­வ­டிக்­கையின் போது இடம்­பெற்ற 7 மணி நேர மோதலில் 5 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிறு காயங்­க­ளுக்கு உள்­ளா­ன­துடன் பொலிஸ் நாயொன்று கொல்­லப்­பட்­டுள்­ளது.
தீவி­ர­வா­திகள் தரப்பில் மூவர் பலி­யா­கி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
ஐரோப்பாவின் முதல் பெண் தற்கொலைதாரி
பாரிஸ் புறநகர் பகுதியில் பொலிஸ் முற்று கையின்போதும் தற்கொலை குண்டை வெடி க்கச் செய்த பெண்ணின் புகைப்பட வெளியா கியுள்ளது. அந்த பெண் குண்டை வெடிக்க செய்தபோது அவரது தலை ஜன்னலுக்கு வெளியால் வந்து வீதியில் விழுந்துள்ளது.
ஐரோப்பாவில் நடத்தப்பட்ட முதலாவது பெண் தற்கொலை குண்டு தாக்குதலாக இது அமைந்துள்ளது. தற்கொலை தாக்குதலை நட த்தியிருக்கும் ஹஸ்னா அயித்புலன் என்ற அந்த பெண் “எனக்கு உதவுங்கள், எனக்கு உதவுங்கள்” என்று கூச்சலிட்ட பின்னரே தற் கொலை அங்கியை வெடிக்கச் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை: