திங்கள், 16 நவம்பர், 2015

மக்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது: முதல்வர் ஜெ.,

சென்னை: தாம்பரம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், வெள்ள நிவாரணப்பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் சென்னையில் ஆர்.கே., நகர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அப்போது முதல்வர் கூறுகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 587 இடங்களில் 207 இடங்களில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் போர்க்கால நடவடிக்கையில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 6 சுரங்கப்பாதைகள் தவிர மற்ற சுரங்கப்பாதையில் தண்ணீர் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் 101 முகாம்கள் அமைக்கப்பட்டு 90 ஆயிரம் உணவு பொட்டலங்கள் சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் 60 முகாம்கள் அமைக்கப்பட்டு 16 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 57 நிவாரண முகாம்கள் மூலம் 18,051 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.


நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 160 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படையின் 60 பேர் கொண்ட 3 குழு மீட்புபடையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடலோர காவல்படையின் 87 பேர் கொண்ட 5 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.சென்னையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையை சேர்ந்த 43 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் தாழ்வான இடங்களில் வசித்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 16 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும். மீட்பு பணிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் லாபங்களுக்காக எதிர்க்கட்சிகள் பொய்ப்பிரசாரம் செய்கின்றன.

சாலையில் விழுந்த மரங்களை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடலூரில் அமைச்சர்கள், அதிகாரிகள் நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சாலை போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்து தடையின்றி செல்கின்றன. மூன்று மாத மழை காலத்தில் பெய்ய வேண்டிய மழை அனைத்தும் மூன்றே நாட்களில் பெய்தது . எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் சேதங்கள் தவிர்க்க இயலாது. கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் ஒரே நாளில் 23 முதல் 37 செமீ மழை பெய்துள்ளது என கூறியுள்ளா dinamalar.com

கருத்துகள் இல்லை: