வெள்ளி, 20 நவம்பர், 2015

நிதீஷ் அமைச்சரவையில் லாலுவின் மகன் துணை முதல்வர்...மற்றொரு மகனுக்கு சுகாதாரத்துறை...

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, பாட்னா காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவின் இரண்டு மகன்கள் உள்பட 28 மந்திரிகளும் பதவியேற்றனர். இவர்களில் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனும், முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றவருமான தேஜஸ்வி பிரசாத் (வயது 26) துணை முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் மந்திரி நிதிஷ் குமார் உள்துறை மற்றும் பணியாளர் அமைச்சகங்களை கவனிப்பார். துணை முதல்வரான தேஜஸ்விக்கு, சாலை மற்றும் கட்டுமானத்துறை உள்ளிட்ட மூன்று இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரரான தேஜ் பிரதாப் சுகாதாரத் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: