வெள்ளி, 9 ஜனவரி, 2015

கனிமொழி திமுக மகளிர் அணி செயலாளர் , ராசா திருச்சி சிவா கொள்கை பரப்பு செயலாளர் ......

திமுக தலைவர் கலைஞர் அறிவிப்பு:திராவிட முன்னேற்றக் கழகத்தின் 14வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு, கழகத் தலைமையோடு துணை நின்று பணியாற்றுவதற்காக, தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக -  துரைமுருகன் அவர்களையும், கழகச் சட்டத் திட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில் கழகத் துணைப் பொதுச் செயலாளர்களாக சற்குணப் பாண்டியன், வி.பி. துரைசாமி, ஐ. பெரியசாமி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரையும் தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கின்றேன்.அது போலவே தலைமைக் கழகத்தின் சார்பில் பல்வேறு அணிகளுக்கான தலைவர்களும், செயலாளர்களும், இணைச் செயலாளர்களும், துணைச்செயலாளர்களும் விரைவில் அறிவிக்கப் படவிருக்கிறார்கள். இதற்கிடையில் ஒருசில அணிகளின் செயலாளர்களை இப்போது அறிவிக்கின்றேன். கொள்கை பரப்புச் செயலாளர்கள் ..  திருச்சி சிவா,  ஆ. இராசா

2. மகளிர் அணிச் செயலாளர் ..கனிமொழி

3. மாணவர் அணிச் செயலாளர் ..  இள. புகழேந்தி

4. தொழிலாளர் அணிச் செயலாளர் .. சிங்கார இரத்தினசபாபதி

மற்ற அணிகளின் செயலாளர்கள், துணை, இணைச் செயலாளர்கள் பின்னர் அறிவிக் கப்படுவார்கள்.’’ nakkheeran,in

கருத்துகள் இல்லை: