வியாழன், 8 ஜனவரி, 2015

அமெரிக்காவில் இணையவழி மிரட்டல் விடுத்த இந்திய மாணவர், நாடு கடத்தப்பட்டார்

அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர் கேசவ் முகுந்த் பிடே (வயது 24).
இந்தியரான இவர் யு டியூப் இணையதளத்தில் புகுந்து, வாஷிங்டன் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி பெண்களை கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
அத்துடன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எலியட் ரோட்ஜர் என்ற மாணவர், தாக்குதல் நடத்தி 6 பேரை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டதை இணையதள பதிவில் நியாயப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் அவர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கிங் கவுண்டி சுபிரீயர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து, பின்னர் தண்டனையை நிறுத்தினார்.
இதையடுத்து அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
அவர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு அமெரிக்காவுக்கு செல்லக்கூடாது, செல்ல முயற்சிக்கவும் கூடாது. அப்படி செய்தால் அதற்காக அவர் மீது வழக்கு தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. dailythanthi.in

கருத்துகள் இல்லை: