புதன், 7 ஜனவரி, 2015

வணிக வளாக திறப்பு விழாவில் காஜல் கலந்துக்கக மாட்டாராம்! டீல் படியல்லையோ?

சமீபத்தில் ஹைதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தை காஜல் அகர்வால் திறக்கயிருப்பதாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இதுபோன்ற திறப்பு விழா நிகழ்ச்சிகளில் நடிகைகள் கலந்து கொள்வதும் லம்பாக ஒரு தொகையை சம்பளமாக பெறுவதும் அடிக்கடி நடப்பதுதான்
  இந்த விஷயத்தில் ஒரு சின்ன முரண். காஜல் அகர்வாலிடம் அனுமதி பெறாமலே விளம்பரத்தில் அவர் பெயரை பயன்படுத்திவிட்டார்களாம் (இல்லை பேரம் படியவில்லையா?) அவ்வளவுதான். என் பெயரை வைத்து மோசடி செய்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் என்னுடைய மதிப்பை கெடுக்க சதி என்று சாமியாட தொடங்கினார் காஜல்.
அவரது அனுமதியில்லாமல் பெயரை பயன்படுத்தியிருந்தால் அது தவறு. சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மதிப்பை கெடுக்க சதி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா? வணிக வளாகத்தை திறந்து வைத்தால் நடிகைகளின் மதிப்பு குறைந்துவிடுமா என்ன? tamil.webduniya.com

கருத்துகள் இல்லை: