செவ்வாய், 6 ஜனவரி, 2015

She Taxi ஓட்டுனராக காவியா மாதவன்

காசி, என் மன வானில், சாது மிரண்டால் படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன். இவர் நிஷால் சந்திரா என்பவரை கடந்த 2009ம் ஆண்டு மணந்தார். அவருடன் குவைத்தில் குடும்பம் நடத்த சென்ற காவ்யா ஒரே ஆண்டில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து மீண்டும் நடிக்க வந்தார். தற்போது ‘ஷீ டாக்சி’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். டாக்சி டிரைவராக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ஷாஜி சுரேந்தரன் கேட்டபோது,‘கார் ஓட்டத் தெரியும் ஆனால் டிராபிக் நேரத்தில் ஓட்டத் தெரியாது. விபத்து நடந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது‘ என்றார் காவ்யா. அப்படியானால் ஒன்றிரண்டு வாரம் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி அம்பாசிடர் காரை அனுப்பி வைத்தார். கார் வந்ததுதான் மிச்சம், காவ்யா அதை ஓட்டிக்கூட பார்க்கவில்லை.


படப்பிடிப்புக்கு புறப்படும் நாள் வந்ததும் நன்றாக, ‘கார் ஓட்டக் கற்றுக்கொண்டீர்களா?‘ என்று இயக்குனர் கேட்டபோது, ‘இல்லை‘ என இயக்குனருக்கு ஷாக் கொடுத்தார். அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ‘பரவாயில்லை நீங்கள் மெதுவாக ஓட்டுங்கள் மற்றபடி கிராபிக்ஸில் காட்சிகளை அமைத்துக்கொள்ளலாம்‘ என்றார் இயக்குனர். அதை காவ்யா ஏற்க மறுத்தார்.‘ஏற்கனவே எனக்கு கார் ஓட்டத் தெரியும். டிராபிக்கில் ஓட்டுவதுதான் சிரமம் என்றேன். ஆனாலும் பரவாயில்லை நானே எல்லா காட்சியிலும் நடிக்கிறேன்‘ என்றார். காட்சி படமாகும்போது அவருக்கு முன்னும் பின்னும் பட யூனிட்டாரின் கார்கள் செல்ல காவ்யா காரை ஓட்டிச் சென்றார். யார் மீதும் மோதாமல் அவர் கார் ஓட்டியதை இயக்குனர் பாராட்டினா - See more at: .tamilmurasu.org

கருத்துகள் இல்லை: