திங்கள், 5 ஜனவரி, 2015

பத்ம பூஷன் விருதுக்கு சாய்னா பெயர் பரிந்துரை: கடைசி நேரத்தில்?

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் பெயர் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பத்ம பூஷன் விருதுக்குப் பரிந்துரை செய்வதற்கான கடைசி தேதி முடிவடைந்தாலும், சாய்னா நேவாலின் சாதனைகளை முன்வைத்து, அவரது பெயரை சிறப்பு அந்தஸ்தின் அடிப்படையில் பரிந்துரை செய்ய உள்ளதாக விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய பேட்மிண்டன் சங்கத்திடம் இருந்து எந்த பரிந்துரைக் கடிதமும் இதுவரை வந்து சேரவில்லை என்று குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சகம், சென்ற வருடமும் எந்த பரிந்துரைக் கடிதமும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது.


“கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி சாய்னாவுக்கு பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினோம். விளையாட்டு அமைச்சகத்திடமிருந்து கடிதம் கிடைத்ததற்கான ஒப்புகைச் சீட்டும் எங்களுக்குக் கிடைத்திருக்கும் நிலையில் எப்படி இந்தக் குழப்பம் ஏற்பட்டதென்று தெரியவில்லை” என்று இந்திய பேட்மிண்டன் சங்கம் தெரிவித்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாய்னா நேவால், “விளையாட்டுத்துறை அமைச்சகம் பத்ம பூஷன் விருதுக்கு என் பெயரை பரிந்துரைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே என் வேலை. எனக்கு விருது கொடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. என் பெயர் ஏன் பரிந்துரைக்கப்படவில்லை என்றே கேட்டேன். மற்றபடி சுஷில் குமாரை இதில் சம்மந்தப்படுத்தியது ஊடகங்களின் கற்பனை” என்று தெரிவித்தார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: