புதன், 7 ஜனவரி, 2015

அனுஷ்கா திரிஷா சமந்தா அசின் தமன்னா ஆகியோர் விரைவில் திருமணம்

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வரவு அதிகரித்தாலும், பத்தாண்டுகளுக்கும் மேலாக கோலோச்சும் நயன்தாரா, திரிஷா போன்ற நாயகிகள் இன்னமும் நடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வப்போது காதல் கிசுகிசு பரவுவதும் பின்னர் அது அமுங்கிப் போவதுமாக இருக்கிறது. இப்போதைக்கு கல்யாண கிசுகிசுவில் அதிகம் அடிபடுகிறார் திரிஷா. அதேபோல சமந்தா, அனுஷ்கா, அசின், தமன்னா, ஆகியோரும் திருமணத்திற்கு தயாராகிவருகின்றனராம்

06-1420524706-trisha-varun-maniyan-500திரிஷாவின் திருமணம்
திரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இருவரும் நெருக்கமாக இருப்பது போல் படங்களும் வெளியாகின. அதை மறுத்தார் திரிஷா.
06-1420524770-trisha-rana-600 திரிஷா – ராணா
திரிஷாவையும், தெலுங்கு நடிகர் ராணாவையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.பொது விழாக்களில் இருவரும் ஜோடிகளாக சுற்றினார்கள். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் அதன்பின்னரே வருண்மணியனுக்கும், திரிஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 06-1420524836-trisha3434-600
வதந்தி பரப்பாதீர்கள்
அதேசமயம் தனக்கு எதிராக தவறான வதந்திகள் பரப்பபடுவதாக திரிஷா கூறியுள்ளார். நாங்களும் மற்றவர்கள் போலத்தான். எங்களுக்கும் மனசு, காதல், திருமண ஆசைகள் எல்லாம் இருக்கிறது. மற்றவர்கள் போலவே நாங்களும் வாழ ஆசைப்படுகிறோம். எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார் திரிஷா.
samantha_13674871676
சமந்தா
திருமண வதந்தியில் அடிக்கடி அடிபடும் நடிகை சமந்தா. இவருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் காதல் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
samantha_13685919987
எப்போ திருமணம்
கடந்த ஆண்டு தமிழில் இவர் சூர்யா உடன் நடித்த அஞ்சான் படம் வெற்றி பெறவில்லை. அதே சமயம் விஜய் உடன் நடித்த கத்தி வெற்றி பெற்றது. திருமணத்திற்கு இப்போது அவசரமில்லை என்று கூறினாலும், பத்து எண்றதுக்குள்ள படத்தை மட்டுமே கையில் வைத்துள்ளார் சமந்தா. அநேகமாக 2015 முடிவதற்குள் திருமண அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
06-1420524925-anushka-visit-kollur-mookambika-amman-temple35-600 அனுஷ்கா ஆண்டு
நடிகை அனுஷ்காவிற்கு கைவசம் முத்தான மூன்று படங்கள் உள்ளன. கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டாருடன் நடித்த லிங்கா வெளியான நிலையில் இந்த ஆண்டு தெலுங்கில் ‘ருத்ரம்மா தேவி’, ‘பாகுபாலி’, தமிழில் அஜீத்துடன்‘என்னை அறிந்தால்’ என வரிசையாக நடித்து வருகிறார்.
06-1420524949-anushka358-600 இளமையான அனுஷ்கா
06-1420524970-asin-d-600தற்போது உடற்பயிற்சி செய்து, உடல் எடையையும் குறைத்திருக்கிறார்அனுஷ்கா. அவருக்கு 30க்கு மேல் வயதாவதால் தற்போது புதிதாக படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, இந்த ஆண்டில் அனுஷ்கா திருமணம் செய்துகொள்வார் என்கின்றனர் அவருடைய உறவினர்கள்.
அசினும் அமெரிக்கா காதலரும்
06-1420524991-asin34‘உள்ளம் கேட்குமே’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை அசின்,தமிழை தொடர்ந்து இந்தி பட உலகிலும் புகுந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அசின்.தமிழில் பிரபலமான அசின், கஜினி படம் மூலம் பாலிவுட் சென்றார். இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இளைஞருடன் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பெற்றோர்கள் சம்மதம்
06-1420525026-tamannah-as-avantika3-600இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்று பெற்றோர்கள் முடிவு செய்திருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அசின் புதிய இந்தி பட வாய்ப்புகளை ஏற்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தமன்னாவின் திருமணம்
நடிகை தமன்னாவிற்கு கைவசம் பாகுபாலி படம் உள்ளது. இந்த நிலையில் இளமையிலேயே அவருக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர் பெற்றோர்கள். ஆனால் தான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் தமன்னா.
06-1420525052-tamanna35-600
காதல் திருமணம்
என் வாழ்க்கை துணைவராக வருபவரை தேர்வு செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது. அதை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். எனக்கு பொருத்தமானவரை கண்டு பிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன். திருட்டு கல்யாணம் செய்வது எனக்கு பிடிக்காது. மாப்பிள்ளை தேர்வானதும் அதை ரசிகர்களுக்கு சொல்லி விட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். எது எப்படியோ சீக்கிரம் மேளம் கொட்டினால் சரிதான்.

கருத்துகள் இல்லை: