சனி, 10 ஜனவரி, 2015

மோடிக்கு சுப்ரீம் கோட் நீதிபதி பாராட்டு: சிறந்த நிர்வாகி மனிதாபிமானம் தொலைநோக்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா

டெல்லியில் நேற்று, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து நிருபர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிருபர், பிரதமர் நரேந்திரமோடி குறித்து தங்களின் மதிப்பீடு என்ன? என்று கேள்வி விடுத்தார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி தத்து, ‘நான் அவரை (பிரதமர் மோடி) ஒரு சிறந்த தலைவராக மதிப்பிடுகிறேன். நல்ல மனிதாபிமானம் உள்ளவர். தொலைநோக்கு சிந்தனை கொண்ட சிறந்த நிர்வாகி அவர்’. தலைமை நீதிபதி மேலும் குறிப்பிடுகையில், ‘நீதித்துறையின் தேவைகள் குறித்து மத்திய அரசு தனி கவனம் செலுத்துகிறது. இதில் அரசின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. ஜனநாயகத்தின் 3 பிரிவுகளின் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது’ என்று தெரிவித்தார்.நீதியே நீயும் இன்னும் இருக்கின்றாயா அல்லது நீயும் இந்த பாராட்டும் மழையில் உயிர்விட்டாயா

1 கருத்து:

Kaja Bantha Navas சொன்னது…

Alraedy Court is giving clean chart to Amitsha, CBI is supporting BJP national president, previously justige shatashivam relief amitsha from the case, so got kerala governar post, same manner chief justige thuthu also expecting from MOdi,