புதன், 7 ஜனவரி, 2015

அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்ப்பது பற்றி கலைஞர் வீட்டில் ஆலோசனை!

தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து, சென்னை யில் நேற்று, கோபாலபுரம் வீட்டில், தி.மு.க., தலைவர் கருணா நிதி தலைமையில், ஆலோசனை நடந்தது. இதில், பொது செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், துணை பொது செயலர் துரைமுருகன் மற்றும் கருணாநிதியின் மகன் தமிழரசு, மகள் செல்வி, மருமகன் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க., பொதுக்குழு கூட்டம், 9ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு முன், அழகிரி விவகாரத்தில், இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என, செல்வியும் செல்வமும் முயற்சி எடுத்து வருகின்றனர். அதற்காக அழகிரியும், சென்னை வந்து தங்கி உள்ளார். இன்றைய தேதியில் அழகிரியை திமுகவில் சேர்க்காது விட்டால்  ஸ்டாலின் முழுக்க முழுக்க ஒரு அதிமுக பாணி பஜனை மடமாக திமுகவை மாற்றி விடுவார், சுயமரியாதை இயக்கம் பாதநமஸ்கார இயக்கமாக மாறிவருவது  வேதனை 
தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அவர், சிகிச்சைக்காக சென்னை வந்திருப்பதாக கூறி வருகிறார். உண்மையில் அவர், இந்த பேச்சு வார்த்தைக்காகவும், கருணாநிதியை சந்திப்பதற்காகவும் தான், இங்கு வந்துள்ளார் என, அறிவாலய வட்டாரத்தால் உறுதி செய்யப்படுகிறது. அவரது விஷயத்தில் நடந்த பேச்சு வார்த்தை, இறுதி கட்டத்தை எட்டும் நேரத்தில், தி.மு.க., குறித்து அவர், சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி, திடீர் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி விட்டது என்றும், அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அழகிரிக்கு எதிராக, ஸ்டாலின் தரப்பில் அறிக்கை விட செய்து விட்டனர். ஆனாலும், அழகிரியை சேர்க்கும் முயற்சியும், பேச்சும் கைவிடப்படவில்லை. நேற்று காலையில், கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி, இதுதொடர்பாக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அதில், அழகிரியை சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஸ்டாலினும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக தெரியவில்லை. ஆனாலும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, அழகிரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர், கருணாநிதி அழைப்புக்காக சென்னையில் காத்திருக்கிறார் என்கிறது, அறிவாலய வட்டாரம்.

- நமது சிறப்பு நிருபர் -தினமலர்.com 

கருத்துகள் இல்லை: