திங்கள், 5 ஜனவரி, 2015

பிகே திரைப்படத்தின் கொள்கைகளை பரப்ப ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது


சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீகே திரைப்படத்திற்கு ஆதரவாகவும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆமீர்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிகே திரைப்படம் மனிதர்கள் பின்பற்றப்படும் மத சடங்குகள் குறித்தும், சமூக வேற்றுமைகள் குறித்தும் கேள்வியெழுப்பி உள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு சமூக அமைப்புகளும், மத நிறுவனங்களும் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மூத்த அபிஎஸ் அதிகாரி அமிதாப் தாகூர் என்பவெர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக இன்று பிகே ஓஎம்ஜி என்ற ஒரு அறக்கட்டளை தொடங்கினார். இது குறித்து தாகூர் கூறுகையில், ”இந்த அறக்கட்டளை மூட நம்பிக்கைக்கு எதிராகவும் பிற்போக்கு தனங்களுக்கு எதிராகவும்  மக்களிடம் பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவிக்கும். இந்த அறக்கட்டளை மிகவும் தீவிரமான பிரச்சினை மூலம் மக்களின் கவனத்தை கவரும்.
மக்கள் மாற்று சிந்தனைகளை ஏற்க வேண்டும் தேவையற்ற எதிர்ப்புகளால் குருட்டுதனமான மதமூலம் மக்களிடையே பிரிவினை உண்டாக்கும்” என்றார். பீகே ஓஎம்ஜி என்னும் பெயர், ராஜ் குமார் ஹிராணி இயக்கிய பிகே படத்தின் தலைப்பையும், உமேஷ் சுக்லா இயக்கிய ஓ மை காட் (ஓ எம் ஜி) படத்தின் தலைப்பையும் சேர்த்தது ஆகும். ஓ மை காட் திரைப்படமும் மத சடங்குகள் குறித்து தீவிர விமர்சனத்தை வைக்கிறது

கருத்துகள் இல்லை: