திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம்,
கடந்த 2012 மார்ச் 29ம் தேதி அதிகாலை திருச்சியில் கொல்லப்பட்டார். கடந்த 2
ஆண்டாக சிபிசிஐடி போலீசார் விசாரித்தும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
ராமஜெயம் மனைவி லதா மதுரை உயர் நீதிமன்றக்கிளையில், இந்த வழக்கை சிபிஐக்கு
மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். மனு மீதான விசாரணையை வரும்
9ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணை தொடர்பாக
சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை அன்று
சமர்ப்பிக்க உத்தரவிட்டது. உயர் நீதிமன்றம் வழங்கிய கெடு முடிய ஒருவார
காலமே உள்ள நிலையில், சிபிசிஐடி எஸ்பி அருண் தலைமையில் புதிதாக
அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிபிசிஐடி தரப்பில் கூறப்படுவதாவது:சிபிசிஐடி விசாரணையில் இருந்த குளித்தலை ஆசிரியை மீனாட்சி, திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் ஆகியோரின் கொலை வழக்கு விசாரணை நீண்டகாலமாக முடியாமல் இருந்தன. எதிர்பாராதவிதமாக மீனாட்சியை அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் இருவர் குடிபோதையில் கொலை செய்ததும், துரைராஜை திருவானைக்காவலை சேர்ந்த சாமியார் கண்ணன் கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த நாம் தமிழர் இயக்க பிரமுகர் முத்துக்குமார் கொலை சம்பவத்தில் கூலிப்படையைச் சேர்ந்த கருப்பத்தூர் கோபால், சூரியனூர் சக்தி, குமுளி ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராமஜெயம் கொலை வழக்கில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். கூலிப்படையினராக இருந்தால் கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணையில் கண்டிப்பாக தகவல் கிடைத்திருக்கும். இளம் வயது கொண்ட சிறிய அளவிலான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இக்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.இவ்வாறு சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக