செவ்வாய், 6 ஜனவரி, 2015

கோட்சேவுக்கு கோயில் கட்டினால் அப்சல் குருவுக்கு மணிமண்டபம் கட்டுவோம்? போஸ்டர் பதிலடி!


ஆர்.எஸ்.எஸ்சில் இருந்தவர் நாதுராம் கோட்சே. இவர் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றார். அந்த கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும். அவர் இந்து தேசத்துக்காக பாடுப்பட்டவர், சுதந்திரபோராட்டத்தில் கலந்துகொண்டவர்.  அதனால் அவருக்கு நாடு முழுவதும் சிலை வைக்கவேண்டும் என மோடி அரசை மறைமுகமாக வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை விடுத்துவருகிறது.இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சி ஒருபரபரப்பு போஸ்டரை வேலூர் நகர் முழுவதும் ஒட்டியுள்ளது. அதில், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலை வைத்தால் ?, அப்சல் குருவுக்கு நாடு முழுவதும் மணிமண்டபம் கட்டுவோம் ? என போஸ்டர் ஓட்டியுள்ளது.nakkheeran.in

கருத்துகள் இல்லை: