செவ்வாய், 1 ஜூலை, 2014

Vijay TV திவ்விய தர்ஷினிக்கு இன்று திருமணம் ! DD Wedding photos !


விஜய் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினிக்கும், அவரது நீண்டகால நண்பருக்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தது.
விஜய் டிவியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரபலம் ஆனவர் திவ்யதர்ஷினி. இவர் ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக  நடத்தியுள்ளார்.. திவ்யதர்ஷினிக்கும் அவருடன் நீண்ட நாள் நண்பர்களாக இருந்து பிறகு காதலர்களாக மாறிய சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நிச்சயமானது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில்  டிடி திவ்ய தர்ஷிணி திருமணம் இன்று நடந்தது..
இரு வீட்டாரும் இதில் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு நடிகர் -நடிகைகள் மற்றும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உட்பட பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
திவ்ய தர்ஷிணி ஸ்ரீகாந்த் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதி வேளச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறவுள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை: