இதுதொடர்பாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த வழக்கறி ஞர் ஆர்.ஸ்ரீபிரியா உயர்
நீதிமன் றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
‘பிறந்தது, வளர்ந்தது தமிழகத்தில்’
இலங்கை உள்நாட்டுப் போரின் காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டி.ராஜா
1990-ம் ஆண்டிலேயே தமிழகத்துக்கு வந்துவிட்டார். ஈரோடு மாவட்டம்
அரச்சலூரில் உள்ள அகதிகள் முகாமில் குடும்பத்தோடு அவர் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நந்தினி உள்ளிட்ட 3 குழந்தைகள் ராஜா தம்பதிக்கு பிறந்தன.
நந்தினி பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான்.
நடந்துமுடிந்த பிளஸ்2 தேர்வில் நந்தினி 1200-க்கு 1170 மதிப்பெண்கள்
பெற்றுள்ளார். எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு அவரது கட்ஆஃப் மதிப்பெண்கள் 197.5
ஆக உள்ளது. இந்நிலையில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்காக விண்ணப்பித்த நந்தினியை
கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. அவர் நேரில் சென்று விசாரித்தபோது, இலங்கை
அகதி என்பதால் எம்பிபிஎஸ் சீட் தரமுடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
‘சர்வதேச மனித உரிமை மீறல்’
தமிழ்நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, படித்துள்ள நந்தினிக்கு இலங்கை அகதி
என்ற ஒற்றை காரணத்தைக் கூறி எம்பிபிஎஸ் இடம் தர மறுப்பது சர்வதேச மனித
உரிமை விதிமுறைகளுக்கும், அகதிகள் உரிமை தொடர்பான சர்வதேச
ஒப்பந்தங்களுக்கும் எதி ரானது. எனவே, நந்தினிக்கு எம்பிபிஎஸ் இடம்
வழங்குமாறும், அவருக்காக ஓர் இடத்தை காலி யாக வைத்திருக்குமாறும் தமிழக
சுகாதாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி
எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க்கிழமை
விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல்
செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒரு வார காலத்துக்கு
ஒத்திவைத்தனர். tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக