சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் எவ்வித அனுமதியின்றி சுமார் 35 ஆயிரம் கட்டடங்கள் இருக்கின்றன.
போரூரில்
புதிதாக கட்டப்பட்ட 11 மாடி கட்டடம், இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான
சம்பவம் சென்னை வாசிகளிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில்
விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை
நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அங்கு வசிக்கும் மக்களின் மனதில் இந்த
விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில்
எங்கு கட்டடங்கள் கட்ட வேண்டுமானாலும் சென்னை பெருநகர வளர்ச்சி
குழுமத்தின் அனுமதியும், 3 மாடி அல்லது 15 மீட்டருக்கு மேல் கட்டப்படும்
கட்டடங்களுக்கு தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழும் பெற்ற வேற
வேண்டியது கட்டாயமாகும்.
கட்டடம்
கட்டப்படுவதற்கு முன்பு அதன் திட்ட வரைபடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி
குழுமத்தின் அனுமதி பெற வேண்டும். கட்டடத்தின் வரைப்படத்தை தயார் செய்யும்
முன்னர் தீயணைப்புத்துறையிடம் அந்த கட்டடத்தில் செய்யப்பட வேண்டிய விபத்து
முன்னெச்சரிக்கை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்காக செய்யப்பட வேண்டிய
திட்டங்கள் ஆகியவை பற்றி ஆலோசனை பெற வேண்டும். ஆனால் சென்னையில் சில
கட்டடங்கள் தவிர்த்து பெரும்பாலான கட்டடங்கள் தீயணைப்புத்துறையின்
அனுமதியின்றியே மக்கள் பயன்பாட்டில் உள்ளன.
கட்டடம்
கட்டப்படும் நோக்கத்தை பொருத்து தீயணைப்புத்துறையின் விதிமுறைகளும்,
பெருநகர வளர்ச்சி குழுமத்தின் விதிமுறைகளும் உள்ளன. தீயணைப்புத்துறையின்
பொதுவான விதிமுறைகளில், கட்டடத் தின் அருகில் செல்லும் வகையில் சாலை வசதி
இருக்க வேண்டும், கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும் தீ எச்சரிக்கை
கருவிகளும், தீ அணைப்பான் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என
கூறப்படுகிறது.
இதேபோல
பெருநகர வளர்ச்சி குழுமம் குடியிருப்புகளுக்கு அனுமதி கேட்கப்படும்
குடியிருப்பில் மக்களுக்கு ஏற்ப பூங்கா இருக்க வேண்டும், வாகனங்கள் நிறுத்த
இடம் ஒதுக்க வேண்டும், ஒவ்வொரு வீட்டுக்கும் சிறந்த வகையில் காற்றோட்ட
வசதி செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
இந்த
விதிமுறைகளை பெரும்பாலனோர் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இதன் விளைவாக
சிறிய அளவில் விபத்து ஏற்பட்டால் கூட, அதன் பாதிப்பும் இழப்பும் பெரிய
அளவில் உள்ளது.
ஆனால்
விதிமுறை கட்டடங்கள் மீது கடுமையான நடவடிக்கையை பெருநகர வளர்ச்சி குழுமம்
எடுத்ததாக தெரியவில்லை. அதே நேரத்தில் தீயணைப்புத்துறைக்கு பாதுகாப்பு
விதிமுறையை மீறும் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வித
அதிகாரமும் வழங்கப்படவில்லை. தீயணைப்புத்துறைக்கு பாதுகாப்பு விதிமுறைகள்
மீறப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தந்த மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்துக்கு பரிந்துரைக் கடிதம் எழுத மட்டுமே அதிகாரம் உள்ளது.
இந்த
காரணத்தால் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் கட்டடங்கள் மீது எந்த
நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையிலேயே தீயணைப்புத்துறை உள்ளது.
அதேநேரத்தில் பெருநகர வளர்ச்சி குழுமம், விதிமுறை மீறி கட்டப்படும்
கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆர்வம் காட்டாமலேயே உள்ளது.
இந்தக்
காரணங்களால் சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின்
எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு நடத்தப்பட்ட
ஆய்வில் சுமார் 33 ஆயிரம் கட்டடங்கள் விதிமுறைகளை பின்பற்றாமல்
கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இப்போது இது மேலும் பல மடங்கு அதிகரித்து
35 ஆயிரம் கட்டடங்களை தாண்டிச் சென்றுவிட்டதாக விஷயமறிந்த வட்டாரங்கள்
தெரிவிக் கின்றன nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக