பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை
வலியுறுத்திப் பேசியதால், தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தானைச்
சேர்ந்த மலாலா யூசஃப்ஸாய்க்கு இந்தாண்டுக்கான சுதந்திரப் பதக்கம்
வழங்கப்படும் என்று அமெரிக்காவின் தேசிய அரசியலமைப்பு மய்யம்
அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மலாலா (17) கூறுகையில்,
""கவுரவமிக்க இந்தச் சுதந்திரப் பதக்கத்தை பெறுவது பெருமைக்குரிய
விஷயமாகும். உலக அளவில் கல்விக்காக போராடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின்
சார்பில் இந்த பதக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தேசிய அரசியலமைப்பு மய்யத்தில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மலாலாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக