ஏழு ஆண்டு கால தொடர் போராட்டத் தின் பலனாக, பெங்களூரைச் சேர்ந்த அக்கய்
பத்மஷாலி என்கிற திருநங்கைக்கு நாட்டிலே முதல் முறையாக ஓட்டுநர் உரிமம்
வழங்கப்பட்டிருக்கிறது.
அவருக்கு கிடைத்திருக்கும் ஓட்டுநர் உரிமம், முகவரியற்ற ஆயிர மாயிரம்
திருநங்கைகளுக்கு முகவரி அளித்திருக்கிறது என்கிறார் கள் சமூக ஆர்வலர்கள்.
உச்சநீதிமன்றம்,கடந்த ஏப்ரல் மாதம், திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
கடவு சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம்,
நிரந் தர கணக்கு எண் அட்டை, வங் கிக் கணக்கு, ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட
அனைத்து ஆவணங்களும் திருநங்கைக ளுக்கு வழங்கப்பட வேண்டும். பிறப்பு,
இறப்பு, ஜாதி, வருமானச் சான்றிதழ்களில் மூன்றாவது பாலினத்தை கட்டாயம்
குறிப்பிட வேண்டும்' என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
அதனைத் தொடர்ந்தே, அக்கய் பத்மஷாலி கடந்த ஏப்ரல் மாதம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். கடந்த வியாழக்கிழமை ஓட்டுநர் உரிமம் கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்தே, அக்கய் பத்மஷாலி கடந்த ஏப்ரல் மாதம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். கடந்த வியாழக்கிழமை ஓட்டுநர் உரிமம் கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அக்கய் பத்ம ஷாலியை,பெங்களூரில் ‘தி இந்து’ சார்பாக சந்தித்துப் பேசியபோது
அவர் கூறியதாவது: ‘‘நம் நாட்டில் ஐந் தாயிரமோ,பத்தாயிரமோ கொடுத் தால்
ஓட்டுநர் உரிமம் கிடைத்து விடும். நான் ஓட்டுநர் உரிமம் பெற சுமார் 7
ஆண்டுகள் தொடர்ந்து போராடி இருக்கிறேன். பல முறை விண்ணப்ப நிலையிலே
நிராகரிக்கப் பட்டது. திருநங்கை என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்
படுகிறது என்பதை அறிந்து வட் டாரப் போக்குவரத்து அலுவலக அதி காரிகள்
முன்னிலையிலே அழுதி ருக்கிறேன்.
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தைரியமாக வட்டாரப் போக்குவரத்து அலுவல
கத்திற்கு சென்று, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தேன். திருநங்கையான
எனக்கு இந்தி யாவிலே முதல் முறையாக ஓட்டுநர் உரிமம் கிடைத்திருக்கிறது.
பாலினத்தை தேர்வு செய்யும் உரி மையை சட்டம் வழங்கி இருப்ப தால்,ஓட்டுநர்
உரிமத்தில் பெண் என்றே குறிப்பிட்டு இருக்கிறேன். திருநங்கைகள் தங்களின்
ஆழ்மன ஆசையை வெளிப்படுத்த வேண் டும் என உணர்த்தவே இவ்வாறு செய்தேன். என்னை
பெண்ணாக அங்கீகரித்து ஓட்டுநர் உரிமம் வழங்கி இருப்பது மட்டற்ற மகிழ்ச்
சியை ஏற்படுத்தி இருக்கிறது’’ என்றார்.
தொடர் போராட்டம்
அக்கய் பத்மஷாலி, இதற்கு முன்பு கடவுச் சீட்டு பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு
மேலாக போராடி னார். வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை பெறுவதற் கும்
பல ஆண்டுகளாக போராட் டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்.ஹிந்து .com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக