வெள்ளி, 4 ஜூலை, 2014

சென்னை கட்டிட விபத்து ! அப்படியே அமுக்கிவிட தனி நபர் விசாரணை குழு ? மேலிடத்தில யாராச்சும் மாட்டிகிட்டாங்களா ?

 சென்னை மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மைகள் வெளிவரும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். 11 மாடி கட்டிடம் விபத்து குறித்து விசாரிக்க நிதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டிருப்பது உள்நோக்கத்துடன் கண்துடைப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் ஒரு நபர் குழுவால் எந்த உண்மையும் வெளிவராது என்று பரவலாக சொல்லப்படுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.
விசாரணையை முடித்து எத்தனை நாட்களுக்குள் ஒரு நபர் குழு அறிக்கை தர வேண்டும் என்று சொல்லாமல் விட்டத்தில் இருப்பதில் இருந்து இது ஒரு கண்துடைப்பு கமிஷன். அரசினர் தப்பித்துக் கொள்வதற்கு அமைக்கப்பட்ட கமிஷன் என்று தான் எண்ணவேண்டி உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள நீதிபதி ரகுபதி புதிய தலைமைச்செயலகம் தொடர்பாக விசாரித்து வருவதை கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

குண்டர் தடுப்புசட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாகவும்,  நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாகவும், ரகுபதி இருப்பதாகவும் கூறியுள்ளார். இத்தனை பொறுப்புகளையும் வகித்து வரும் ரகுபதியே மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்ததது பற்றி விசாரிக்கவும் நியமிக்கபட்டிருப்பதில் இருந்து இது உளநோக்கம் கொண்ட கமிஷன் என்று தெளிவாக இருப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

11 மாடி கட்டிடம் இடிந்து இதுவரை 61 பேர் பலியானதற்கு அரசே முழுபொறுப்பு என்று அவர் கூறியுள்ளார். முதலமைச்சரும், துறையின் அமைச்சரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். dinakaran.com

கருத்துகள் இல்லை: