சனி, 5 ஜூலை, 2014

31 'ஏசி'கள், 25 'ஹீட்டர்'களுடன் வாழ்ந்த ஷீலா தீட்சித் ! மேட்டுக்குடி ராணிகள் எல்லாம் அப்படிதான் !

'டில்லி முதல்வராக ஷீலா தீட்சித் பதவி வகித்த போது, அவரின் அதிகாரப்பூர்வ வீட்டில், 31 'ஏசி'களும், 25 'ஹீட்டர்'களும் பொருத்தப்பட்டிருந்தன' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், சுபாஷ் அகர்வால் என்பவர் விடுத்திருந்த கேள்விகளுக்கு, மத்திய அரசின் பொதுப்பணித் துறை அளித்துள்ள பதில்:டில்லி முதல்வராக ஷீலா தீட்சித் பதவி வகித்தபோது, அவருக்கான அரசு வீட்டில், 31 'ஏசி'க்களும், 15 கூலர்களும், 25 ஹீட்டர்களும், 16 ஏர் பியூரிபையர்களும், 12 கெய்சர்களும் பொருத்தப்பட்டு இருந்தன.ஷீலா தீட்சித், அந்த வீட்டில் குடியேறிய போது, மின்சார உபகரணங்களை மாற்றுவதற்காக மட்டும், 16.81 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. முதல்வர் பதவியிலிருந்து, ஷீலா தீட்சித் விலகி, கேரள கவர்னராக நியமிக்கப்பட்டதும், இந்த மின் உபகரணங்களில் பெரும்பாலானவை, பல அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டன.  17 லட்சம் ரூபாய்க்கு வீட்டை புதுபிப்பது ஒன்றும் பெரிதல்ல. பிஜேபி யின் எடியுரப்பா தனது கழிவறைக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவிட்டார் என்று செய்தி வந்ததே. அப்போது யாரும் கண்டு கொள்ள வில்லை.


மீதமுள்ள, 'ஏசி'க்கள் உட்பட, பல உபகரணங்கள் தேவைக்கேற்ற வகையில் பயன்படுத்தப்படும். ஷீலா தீட்சித், டில்லி முதல்வராக பதவி வகித்த போது, மோதிலால் நேரு மார்க் பங்களாவில் வசித்தார். 3.5 ஏக்கரில் அமைந்துள்ள, அந்த பங்களா, மூன்று படுக்கை அறைகளைக் கொண்டது.ஷீலா தீட்சித் வெளியேறிய பின், அந்த பங்களா, 35 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, அதில் தான் தற்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குடியேறி உள்ளார்.இவ்வாறு, அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை: