ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்திய
நர்சுகளை விடுவித்து விமான நிலையத்தில் விட்டு விட்டதாகவும்,
அனைவரையும்
இந்தியாவுக்கு பயணிக்க அனுமதிவிட்டதாகவும் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி
தெரிவித்துள்ளார்.
கடத்திச் செல்லப்பட்ட 46 நர்சுகளில், கேரளாவைச் சேர்ந்த ஒரு நர்சு தனது
தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைவரும் பாதுகாப்பாக
இருப்பதாகவும், தீவிரவாதிகள் எந்த தொல்லையும் கொடுக்கவில்லை என்றும்,
உணவும், குடிநீரும் கொடுத்ததாகவும், ஒரு கட்டடத்தில் அனைவரையும் ஒன்றாக
வைத்திருப்பதாகவும், கட்டடத்தைச் சுற்றி சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாகவும்
தெரிவித்துள்ளார் என்று அந்த கேரள நர்சின் தாயார் ஊடகங்களுக்கு
தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த தாய் கூறுகையில், தனது மகளால் அதிக நேரம் பேச முடியவில்லை
என்றும், செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டது, மேற்கொண்டு பேச முடியுமா?
என்று தெரியவில்லை என்றும் கூறியதாக தெரிவித்தார்.
இந்த தகவலை கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், விடுவிக்கப்பட்ட நர்சுகளை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை உம்மன் சாண்டி மீண்டும் சந்தித்துப் பேசி வருகிறார்.tamil.webdunia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக