ஞாயிறு, 29 ஜூன், 2014

டயபடீசை கட்டுப்படுத்தும் கவுணி அரிசி ! வேளாண் பல்கலைகழகம் சாகுபடி !

தமிழகத்தில் ஐ.ஆர்.20, ஐ.ஆர்.50, சீரக சம்பா, ஆடுதுறை, சி.ஆர் 1000 என 30க்கும் மேற்பட்ட அரிசி ரகங்கள் விற்பனைக்கு உள்ளது. அரிசி சாதம் அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் அதிகரிப்பதாக பிரசாரம் செய்யப்படுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்ற வகையில், புதிய ரக நெல் சாகுபடியை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் துவக்கிள்ளது. ‘கவுனி‘ எனப்படும் அந்த புதிய ரக நெல் வேளாண் பல்கலைகழகத்தின் நெல் ஆராய்ச்சி மையத்தில் 1 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்தனர். இது தொடர்பாக வேளாண்மை பல்கலைகழக  நெல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ராபின், பேராசிரியர் ரவீந்திரன் கூறியதாவது:அரிசியில் உள்ள ஸ்டார்ச், ஆல்பா அமிலோஸ், பிளேசிக் அமிலம் போன்றவை தான் சர்க்கரை நோய்க்கு காரணம். இவை இன்சுலின் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சாதாரண அரிசியில் இந்த பொருட்கள் 80 சதவீதம் இருக்கிறது. கவுனி அரிசியில் 60 முதல் 65 சதவீதம் மட்டுமே ஸ்டார்ச் உள்ளது.


மேலும் இன்சுலின் சுரப்பு தேவையான அளவு கவுனி அரிசி மூலமாக கிடைக்கிறது. காலை எழுந்ததும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 120 மில்லி கிராம் அளவிற்கு குறைவாக இருக்கவேண்டும். கவுனி அரிசி மூலமாக குளுக்கோஸ் அளவு கட்டுபாட்டிற்குள் வருகிறது. குளித்தலை, காரைக்குடி பகுதியில் 50 ஏக்கரில் கவுனி நெல் சாகுபடி நடக்கிறது. கேரள மாநிலத்தில், நவரா என்ற வகை நெல் சாகுபடி நடக்கிறது. இது கவுனிநெல் போன்று சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. கவுனி அரிசி கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கவுனி அரிசி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் நன்றாக வளரும். சாகுபடி காலம் 144 நாட்கள். கவுனி சாகுபடி அதிகரித்தால் விலை குறையும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர் - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: