ஞாயிறு, 5 டிசம்பர், 2010

அரங்கமே காலி : ராமதாஸ் அதிருப்தி

இடைப்பாடியில் நடந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில், மேடைக்கு ராமதாஸ் வந்தபோது, பாதிக்கும் மேற்பட்ட சேர்கள் காலியாக இருந்தன. ஆங்காங்கே பலர் நின்று கொண்டு இருந்தனர்.

இதைப் பார்த்து அப்செட்டான ராமதாஸ், "மேடையில் உட்கார்ந்து இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் மேடையிலிருந்து இறங்க வேண்டும். காலியாக உள்ள சேர்களில் மக்கள் வந்து உட்கார்ந்த பின் தான் மேடைக்கு வரவேண்டும்' என, கோபத்தோடு கூறினார்.ராமதாஸ், ஜி.கே.மணியை தவிர அனைவரும் மேடை விட்டு இறங்கினர். பின்னர் அன்புமணி வந்த பின் தான் கட்சி நிர்வாகிகள் மேடைக்கு வந்தனர்.இடைப்பாடி தொகுதியில் இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடந்தது.

பா.ம.க., முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசியதாவது:இது மற்ற கட்சிகள் நடத்துவது போல் இது மாநாடோ, கூட்டமோ இல்லை. இளைஞர்களுக்கான பயிற்சி முகாம். தமிழகத்தில் சமீபத்தில் ஒரு சர்வே மேற்கொள்ளப்பட்டது. அதில் குடிசைகளில் அதிகமாக வசிப்பவர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் என ஒடுக்கப்பட்ட நிலையில் வாழுபவர்கள் வன்னியர்கள், என சர்வேயில் கூறப்பட்டு உள்ளது. வன்னியர் சமுதாயத்தினர் அனைவரும் பா.ம.க.,வுக்கு ஓட்டுபோட்டால் மட்டுமே வளமான தமிழகம், வன்னியர் ஒருவர் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.

ராமதாஸ் பேசியதாவது:தமிழகத்தில் 1996ம் ஆண்டு பா.ம.க., தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்ற இடைப்பாடி, ஆண்டிமடம், தாரமங்கலம், பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் இடைப்பாடி தொகுதி முதன்மையானது. இந்த தொகுதியில் உள்ள வன்னியர்களிடம் இருந்த ஒற்றுமை மற்ற தொகுதிகளில் இல்லை. தமிழகத்தில் மொத்தம் ஆறரை கோடி மக்கள் உள்ளனர். அதில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். நீங்கள் அனைவரும் பா.ம.க.,வுக்கு ஓட்டு போட்டாலேயே நாம் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற முடியும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.


குரு சவால் : ஜன. 3ல் நடக்கும் வன்னியர் சங்க மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திண்டுக்கலில் நடந்தது.

மாநில தலைவர் குரு பேசியதாவது: காங்கிரஸ் கட்சி தோன்றுவதற்கு முன் 1881ல் வன்னியர் சங்கம் தோன்றியது. தமிழகத்தில் 2.5 கோடி வன்னியர்கள் உள்ளனர். சிறுபான்மையினர் ஒரு கோடி பேர் உள்ளனர். எனவே ஜாதி வாரியாக கணக்கெடுக்க கூறுகிறோம். ஜாதி எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு தரக் கூறுகிறோம். ஆயிரம் பேர் மட்டுமே உள்ள குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த மத்திய அமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.2006 சட்டசபை, 2009 லோக்சபா தேர்தலில் நாம் யாருடன் கூட்டணி வைத்திருந்தோமே அவர்கள் நமது முதுகில் குத்தினர். இதனால் தோற்றோம். வரும் தேர்தலில் இவர்கள் நமது முதுகில் குத்தினால், நாம் அவர்கள் நெஞ்சில் குத்துவோம். இது வரை தமிழகத்தில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும், குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஜாதியை சேர்ந்தவர்களே முதல்வராக பொறுப்பேற்றுள்ளனர். தெலுங்கு பேசும் விஜயகாந்தும் ஆசை படுகிறார்.வரும் 2011 தேர்தலில் எந்த கூட்டணியில் இருந்தாலும் பா.ம.க., ஆதரவு இல்லாமல் யாரும் முதல்வர் பதவி அடைய முடியாது.இவ்வாறு குரு பேசினார்.
கட்டிமேடு சுப்பையா - பதியாரியாத்,சவுதி அரேபியா
2010-12-05 16:09:17 IST
இன்னும் எத்தனை காலம் இந்த மக்களை ஏமாற்ற முடியும் மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள், சென்ற தேர்தலில் சீட் காலி இந்த மீடிங்கில் இருக்கை காலி வரும் தேர்தலில் கட்சியே காலி தயவு செய்து குருவின் குரு பெயர்ச்சி ஜாதகம் பார்க்க செய்யவும்....
pavalan - Bangalore,இந்தியா
2010-12-05 16:07:30 IST
ஐயா அவர்களே எங்கள் சிதம்பரம் தொகுதில் நீங்கள் செய்த நன்மைக்குதான் இன்று திருமாவளவன் வலம் வருகிறார்.ஒவொவொரு வருடமும் வெள்ளத்தால் நாங்கள் தவிக்கும் போது ஜாதி காரர்கள் தவிக்கிறார்கள் என்று நீங்களும் மாவீரர் குருவும் எங்களுக்கு தைலாபுரத்தில் இருந்தும் காடு வெட்டில் இருந்தும் உதவுவது ....அப்பப்பா ! தாங்க முடியவில்லை ...இங்கே உரக்க ஜாதி யை பேசும் உயிரற்ற களிமன்ன்களே ... கொஞ்சமாவது திருந்துங்களேன் ......
Ramanathan - Chidambaram,இந்தியா
2010-12-05 15:52:03 IST
First let the leader control his party members especially, youth not having alhocol and smoking. Automatically two-third population ( as per their statement) is going to have smoke free and sound health people in tamil nadu. Let other's follow it....
பெருமாள் - இந்தியா,இந்தியா
2010-12-05 15:51:53 IST
எவளவு அடிச்சாலும் தாங்குறாரு இவரு ரொம்ப நல்லவரு , அதனால இந்த தேர்தல்லயும் அடிக்கலாம் அஆஆப்பு ...........
karthik - Qatar,இந்தியா
2010-12-05 15:37:30 IST
முனைவர் இரா மணி கண்ணன் அவர்களே நீங்கள் அய்யா ராமதாஸ் கு பரிந்து பேசுவதை பார்க்கும்போது நீங்கள் அவருடைய ஜாதியை தவிர வேறு காரணம் இருக்க முடியாது. முதலில் தமிழ்நாட்டில் ஜாதியை ஒழியுங்கள். முனைவர் பட்டம் வாங்கிய உங்களுக்கு இதன் அவசியம் புரியும் என்று நினைக்கிறேன்....
Vanniyan - Salem,இந்தியா
2010-12-05 15:37:23 IST
PMK மக்களால் மறக்கப்பட கட்சி...
shabeer - manama,பஹ்ரைன்
2010-12-05 15:36:56 IST
கொள்கை என்ற மானத்தை விட்டவனுக்கு இனி மரியாதை எதற்கு ????....
aravindan - chennai,இந்தியா
2010-12-05 15:33:12 IST
இப்போதைக்கு ஐயா எங்க போனாலும்(திமுக / அதிமுக ) யோக்கியன் வாரன் சொம்ப எடுத்து உள்ளே வை கதைதான் அதன் முன்னோட்டம் அவர்கள் கட்சிக்குளையே தெரிது....
கார்த்தி... - Juffair,பஹ்ரைன்
2010-12-05 15:30:44 IST
ஐயா!!! அரங்கம் காலியானதிர்கே இவ்வளவு டென்சனா...?? இந்த தேர்தலோட உங்க கட்சியே காலியாக போகுது...என்ன பண்ண போறீங்க...???...
saravanan - போரூர்.chennai,இந்தியா
2010-12-05 15:29:03 IST
ஐயா நீங்கள் பிர ஜாதி மக்கள் பிரச்சனயும் பார்க்கவேண்டும்....
ராஜா - pudukkottai,இந்தியா
2010-12-05 15:04:30 IST
வந்துட்டாரு ஓட்டுங்க ஓட்டுங்க ஐயோ காப்பாதுங்க மக்களை...
சி.ராஜு - riyadh,இந்தியா
2010-12-05 14:52:13 IST
கேப்பைல நெய் வடியுதுனா கேப்பாருக்கு மதி எங்க போச்சு? அய்யா அவர் பேட்சை தைலாபுறம் தோட்டத்துல பேசட்டும்?...
அன்பு - doha,இந்தியா
2010-12-05 14:48:39 IST
எப்ப-தான் இவனுங்க மனுசனா மாறுவாங்க !!!...
moorthy - chennai,இந்தியா
2010-12-05 14:48:10 IST
வன்னியர் என்றால் யார் என்று மக்களுக்கு முதலில் ஐயா தலிவுப்டுதாவேண்டும் அது அவரது கடமயும் கூட...
கிராமத்தான் - சிங்கபூர்,சிங்கப்பூர்
2010-12-05 14:46:07 IST
வன்னியர்களை ஒற்றுமையாய் இருக்க சொல்லும் ராமதாசை குறைசொல்லும் வாசகர்களே, தமிழர், தமிழர் என்று சொல்லுவது மட்டும் சரியா?, நாம் இந்தியர்கள் இல்லையா, ஏன் தமிழக தலைவர்களை ஆதரிக்கிறீர்கள், இந்திய தலைவர்களை ஆதரயுங்கள், ஏன் இந்தியா, இந்தியர், பரந்த மனப்பான்மை கொண்டு உலக தலைவர்களை கூட நீங்கள் ஆதரிக்கலாம். ஆனால் தான் சார்ந்த சமுதாயத்தின் நிலை கண்டு வெகுண்டு எழுந்த தனிமனிதனின் முயற்சியால் வன்னிய சமுதாயம் அடைந்து வரும் பலன் நாடு அறியும், காவேரி, கிருஷ்ண, பாலாறு, நானுறு மீனவர் சாவு, ஈழத்தில் பல ஆயிரம் சாவு என்று தமிழர்கலாக இருந்து நீங்கள் சாதித்தது உலகம் அறியும், விட்டுவிடுங்கள் இவர்களாவது ஒற்றுமையாய் இருந்து, போராடியாவது உரிமையை பெற்று மற்ற சமுதாயத்தினரை போல வளமாய் வாழட்டும். வன்னியர்களுக்காக கண்ணீர் சிந்தும் போலி முதலைகள் இத்தோடு நிறுத்திக்கொள்ளட்டும்....
palaniappan - idappadi,இந்தியா
2010-12-05 13:59:52 IST
வன்னியன் என்ற ஒரு வார்த்தைக்காக ஏமாந்து ஒட்டு போட இனியும் நாங்கள் முட்டாள் இல்லை...சேலம் இடப்பாடியில் பாமகவுக்கு அதிமுக, திமுக எவ்வளவோ மேல்... இவர்கள் செய்யும் பாவத்துக்கு வன்னியர் சமுதாயத்தையே அடகு வைக்கிறார்கள்.. வன்னியன் என்றால் மற்ற சமுதாய மக்கள் எதிரியாக பார்க்கும் படி செய்து விட்டார்கள்.... எடப்பாடியில் பாமகவுக்கு எங்கள் வன்னிய ஒட்டு சத்தியமாக கெடையாது......
punniyamoorthi - saudi,இந்தியா
2010-12-05 13:45:36 IST
ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்களே நீங்க படிச்சு தானே டாக்டர் பட்டம் வாங்கினிங்க தமிழிலா ஆங்கிலத்திலா...
davit - Chennai,இந்தியா
2010-12-05 13:41:35 IST
Ayya, ungalukku keralavula oru periya ethir kaalam irukkungayya... Pesama anga poidalama......
சிவா - kuwait,குவைத்
2010-12-05 13:21:10 IST
இவர்கள் மட்டுமா ஜாதி அரசியல் பண்ணுகிறார்கள் எல்லாருமே ஜாதி, மதம் சொல்லி தான் அரசியல் பண்ணுகிறார்கள். தமிழர்களே உங்களுக்கு என்ன தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தல் ஓட்டு போட்டு விடுவீர்கள் அப்புறம் எதுக்கு ஜாதி மதம் என்று பேசி நேரத்தை வீணாக்கணும் பணம் கொடுப்பக வாங்கிகொண்டு ஏதும் பிரச்னை பண்ணாம் ஓட்டை போட்டுவிட்டு போங்க அதான் உங்களுக்கு நல்லதூ, புரிகிறதா தமிழர்களே...
கோபால் Ppl piping - Pandanroad,சிங்கப்பூர்
2010-12-05 13:20:09 IST
தமிழின தலைவா உணக்கு வெற்றி நிச்சயம் , நாங்கள் இருக்கிறோம் ,...
அசோக் - துபாய்,இந்தியா
2010-12-05 13:18:20 IST
காடு வெட்டி + மரம் வெட்டி: உங்களிடம் ஒரு சின்ன கேள்வி: 7 ல 7 போனா மீதி எத்தினி?? லேகியம் வித்தாவது பொழைக்கலாம் இந்த பொழப்புக்கு பதுலா... 
சகன் - uae,இந்தியா
2010-12-05 13:01:51 IST
இந்திய அரசியலில் ஏன்! உலக அரசியலில்! இவ்வளவு பிச்சைகாரதனமாக! ஓட்டு கேட்கின்ற முதல் ஓட்டு பிச்சைகாரன்! மரம் வெட்டி ராம் மட்டுமே ! உன்னை எல்லாம் என்ன சொல்வது என்றே ! தெரியவில்லை ! உனது சுயநலத்திற்காக ! ஜாதியின் பேரில் ! இளைஞர்களிடம் ஜாதி வெறியை தூண்டி விடுகின்ற நீ எல்லாம் ஒரு மனித இனமே இல்லை ! ஜாதி இல்லவே இல்லை ! என்று இளைஞர்களிடம் விழிபுணர்வு கொண்டுவந்தனர் ! அன்றைய தேசிய தலைவர்கள் ! நீ அதை அடியோடு அழிக்க பாக்கின்ராய் ! உணக்கும் திவீரவாதிக்கும் என்ன வித்தியாசம் ஒன்றும் இல்லை !...
இந்திரா ராஜேந்திரன் துபாய் - துவரங்குறிச்சிதிருச்சி,இந்தியா
2010-12-05 12:58:25 IST
அய்யா முனைவரே நீங்க என்ன வன்னியரா ரோசம் பொத்துகிட்டு வருது தைவன்ல எத்தனை வன்னியர் இருக்கிறங்கண்ணு கணக்கு எடுத்துட்டீங்களா சீக்கிரம் எடுத்து அனுப்புங்க தேர்தல் வரப்போகுது ...............உங்கள் பட்டம் என்னன்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா சாதி பெயரை சொல்லி நாட்ட குட்டிசுவராக்க நீங்க போல மேதாவி கண்டிப்பா ராமுக்கு தேவை...
பிரகாஷ் - திண்டிவனம்,இந்தியா
2010-12-05 12:45:49 IST
ராமதாஸ நானும் வன்னியன் ஏன் இப்படி ஜாதி ஜாதின்னு வெறிபிடித்து அலையற கடிப்பா இந்த தேர்தல வன்னியர்கள் யாரும் உனக்கு ஒட்டு போடா மட்டோம் ஜாதிய விட்டுட்டு மக்களுக்காக சேவை செய் அப்ப உன் கட்சி வளரும் சரியா...
kalaikumar - kolkata,இந்தியா
2010-12-05 12:34:29 IST
வாழ்க பா ம க , வளர்க தமிழ் மக்கள்...
மு.நாட்ராயன் - தமிழ்நாடு,இந்தியா
2010-12-05 12:31:18 IST
தமிழ் நாட்டு மக்களுக்கு ஓர் நல்ல செய்தி !!! ராமதாஸ் தனது கட்சியை கலைத்துவிட்டார் !!!!! இனி தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்கலாம்! ஜாதி வெறிக்கு இனி இடம் தமிழ் நாட்டில் இல்லை !!!!...
மு.நாட்ராயன் - தமிழ்நாடு,இந்தியா
2010-12-05 12:21:43 IST
ஏன் ராமதாஸ் அவர்களை இப்படி போட்டு வதைக்கிரிர்கள் . ஜாதி வெறி பிடித்த அவர் கட்சியைத் தான் கலைக்கப்போகிறாரே. அவர் தன்மானத் தமிழன். பெரியாரைப் போல் சாதிகளற்ற சமுதாயத்தை உருவக்கப்போகிறார்!!!...
நாய் சேகர் - சென்னை,இந்தியா
2010-12-05 12:14:30 IST
மரம் வெட்டி வளர்த்த கட்சி இப்படி மண்ணோடு மண்ணா போகும்னு யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டாங்க. பாவம் யா நீங்க. என்ன பண்ணுவீங்க இப்ப. கூட்டணி போச்சு, மகனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி போச்சு, இப்போ கட்சி கூட்டமே போச்சுன்னா அப்புறம் உங்க எதிர்காலம் ???????????????????...
ramesh - singapore,இந்தியா
2010-12-05 12:07:19 IST
ஜாதி காலம் முடிந்து விட்டது. இது ராமதாஸ்க்கு மட்டுமல்ல எல்லா ஜாதி கட்சிகளுக்கும் தான். திருமா போன்றவர்களும் ஜாக்கிரதை....
ச.natarasan - chennai,இந்தியா
2010-12-05 12:02:09 IST
இவர் என்னடான்னா ,எதற்கு எடுத்தாலும் சாதி, அடி, உதை, அங்க குத்து ,இங்க குத்துன்னு ,சொல்கிறார்!?இவர்மகன் என்னடான்ன பதவி [தனக்கு] வெறி பிடித்திருக்கு என்கிறார்! இவர்கெளெல்லாம் டாக்டர் பட்டம் வேறு பெற்றிருக்கிறேன் என்கிறார்கள்!இவர்கள் தலைமையில் atchi வந்தால் தமிழ்நாடு என்ன ஆகுமோ! தலை சுற்றுகிறது!கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்! ச.நடராசன்....
saravanan - சென்னை,இந்தியா
2010-12-05 11:59:36 IST
மனிவண்ணன் அவர்களே, படித்த இளைஞர்கள் ஒரு போதும் ராமதாஸ் பக்கம் வரமாட்டார்கள், படிக்காத வன்னியர்களை வேண்டுமானால் ராமதாஸ் ஏமாற்றலாம். ஏனன்றால் தினமும் தமிழக அரசியலை பார்த்து கொண்டுதான் இருகிறார்கள்....
பர்தி - லக்ஷ்மாங்குடி,இந்தியா
2010-12-05 11:50:49 IST
இன்னும் வெட்கமே இல்லாமல் கட்சி நடத்துறியே ? சீக்கிரமா திண்டுக்கல்லுக்கு போய் வரையில நில்லு . உன்னமாதிரி நிறைய கட்சிகரனுங்க நிக்கிறானுங்கலாம் . மக்கள் விழித்துக்கொண்டார்கள் தம்பி! குஜராத்திலும் , பீகாரிலும் பார்த்தில்ல ....
Mohamed Kayal - Jiangmen,சீனா
2010-12-05 11:37:34 IST
//நீங்கள் அனைவரும் பா.ம.க.,வுக்கு ஓட்டு போட்டாலேயே நாம் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற முடியும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்// அய்யா இவங்க அனைவரும் ஓட்டு போட்டா நீங்க ஊட்டுக்குதான் போகனும் சட்டசபைக்கு போக முடியாது....
வன்னியன் - தமிழ்நாடு,இந்தியா
2010-12-05 11:27:44 IST
அய்யா நமக்கு எதுக்கையா இந்த அரசியல்...வாங்க நம்ம பழைய பிடி மாடு மேய்க்கவே போயிரலாம்... 2.5 கோடி லே 25000001 ஆஹ போயிரலாம்.......
நலம்விரும்பி - india,இந்தியா
2010-12-05 11:15:31 IST
அரசியல்வாதி கூட்டம் போட்டு பேசினால் அதை நாம் உட்கார்ந்து கவனித்தால் அவன் பெரிய ஆல் ஆகிவிடுவான் ,அதை நாம் கவனிக்காமல் போனால் நாம் பெரிய ஆல் ஆகிவிடுவேம்...
கோவிந்தராஜு - கிள்ளான்மலேசியா,இந்தியா
2010-12-05 11:15:00 IST
தமிழக அரசியலில் தரம்கெட்ட அரசியல்வாதிகளில் உன் குடும்பதிற்கே முதலிடம்!!சாதி பெயரில் ஒட்டு கேட்கும் நீயெல்லாம் தமிழன? மேலே காங்கிரஸ் உடன் கூட்டணி. ஆனால் தமிழகத்தில் தமிழ், தமிழ், தமிழன் என வேஷம் .... நீ போன்ற அரசியல்வாதிகள் ஒழியாதவரை தமிழகத்தை இறைவனாலும் காப்பாத்தமுடியாது. தமிழா நீ இன்னும் இப்படி இருக்கிறாய்!!! வருத்தம் தான் பதிலா ?...

கருத்துகள் இல்லை: