செவ்வாய், 7 டிசம்பர், 2010

இந்தியாவிலே வழங்கப்படும் இலங்கைக் குடியுரிமை


படம்:சந்திராவின் மகிழ்ச்சிக்கு காரணம், கடந்த சனிக்கிழமை விருதுநகர் மாவட்ட வேம்பகோட்டை இலங்கை அகதி முகாமிலே தனது மகள் சிறிதேவிக்கு, இலங்கை அரசு 16 வருடங்களின் பின் பிறப்புச் சான்றிதழை இந்தியாவிலே வழங்கியமை தான்.

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர், தமிழ்நாடு அரசாங்கம் மற்றும் ஈழ அகதிகளுக்கான உதவிகளை வழங்கும் அமைப்புகள் என்பன ஒண்றிணைந்து சான்றிதழ்கள் வழங்கும் நடமாடும் சேவையினை நடத்தி, இலங்கை தமிழ் மக்களின் குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை இந்தியாவிலே கிடைக்க வாய்ப்பினை அளித்துள்ளனர்.

இந்த நடமாடும் நேவையின் மூலம் 6 முகாம்களில் உள்ள 238 குழந்தைகளுக்கு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தென் இந்தியாவிலே அமைந்திருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகரக பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரை முகாமில் கிடைக்கப் பெற்ற 303 சான்றிதழ் விண்ணப்பங்களில் 251 சான்றிதழ்கள் உடனே வழங்கப்பட்டுவிட்டதாகவும், ஏனையவை தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்று சகல முகாம்களிலும் சான்றிதழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் ஆனது ஒவ்வொரு குழந்தையும் தனது தாய் நாட்டுக்குக்கு திரும்பும் தருணத்தில் மிகவும் அவசியமானதொரு ஆவணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்புகின்ற போது இலங்கை குடியுரிமை உறுதிப்படுத்துவதற்கோ, கடவுச்சீட்டை பெற்று கொள்ளவோ, பாடசாலை அனுமதியை பெற்றுக் கொள்ளவோ இந்த சான்றிதழ் மிகவும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்பு இவ் பிறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சென்னைக் காரியாலயத்திற்கு சென்று தான் பெற வேண்டி இருந்தது, இதற்கான பயணச்செலவும் அதிகம் (3,770 இந்திய ரூபா) என்பதானாலேயே அவர்கள் இவ்வாறானதொரு சேவையை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

122 முகாம்களில் 19,934 குடும்பங்களை சேர்ந்த 70,754 பேர் முகாம்களில் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- - அதரெண -

கருத்துகள் இல்லை: