நாயை சுட்டுக்கொன்று விட்டு ஆயுதமுனையில் பெருமளவு பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் யாழ். மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30மணியளவில் யாழ்.தெல்லிப்பளை பிரதேசத்துக்குட்பட்ட அளவெட்டிப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெய்துகொண்டிருக்கும் அடைமழையிலும் படையினரின் பலத்த பாதுகாப்பு நிறைந்த வேளையிலும் ஆயுதமுனையில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை யாழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அளவெட்டி எட்டாம் கட்டையில் உள்ள வீட்டுக்குள் முகத்தை கறுப்புத்துணியினால் மறைத்துக்கொண்டு சென்ற ஆயுததாரிகளே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வீதியில் சென்ற சிலரையும் இவர்கள் மறித்து பரிசோதனைகள் மேற்கொண்டதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பிலான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். |
ஞாயிறு, 5 டிசம்பர், 2010
அளவெட்டியில் நாயை சுட்டுக்கொன்று விட்டு ஆயுதமுனையில் நகை, பணம் கொள்ளை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக