ஜனாதிபதியின் லண்டன் விஜயமும் புலிப்பினாமிகளின் சதிராட்டமும்!
by salasalappu
ஐரோப்பாவில் புலம்பெயர்ந்த புலிப்பினாமிகள் கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் லண்டன் விஜயத்துடன் புலிக்கொடியுடன் கடைவிரித்திருந்தார்கள். இன்றைய நிலையில் கடையை மூடிவிட்டு முள்ளிவாய்க்காலில் வாழ்க்கையை இழந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் பாரியதொரு வரலாற்றுக்கடமையை செய்துவிட்டதாக நினைத்துக் கொண்டு தாமும் தம் வாழ்க்கை நலன்களும் என்று தத்தம் பணிக்கு திரும்பிவிட்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகளுக்கு பிரிட்டிஸ் போறம் தரப்பில் பெருந்தொகை நிதி செலவிடப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. அவுஸ்திரேலியாவிலிருந்து கூட நிதிபெறப்பட்டதாக பிரிட்டிஸ் போறத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.இந்த நிதிவளங்களை முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கோ அல்லது இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கோ செலவு செய்திருக்கலாம்.
இதில் லண்டன் புலிப்பினாமிகளின் பங்கே முக்கியமானதாக நோக்கப்படுகின்றது. இவர்களுக்கு பக்கபலமாக சுவிஸ் ஈழத்தமிழர் அவை பிரான்ஸ் ஈழத்தமிழர் அவை, ஜெர்மன் ஈழத்தமிழர் அவை, நெதர்லாந்து ஈழத்தமிழர் அவை , கனடா ஈழத்தமிழர் அவை, அவுஸ்திரேலிய ஈழத்தமிழர் அவை என்று அனைத்து புலிப்பினாமி அமைப்புக்களும் தத்தம் பங்கிற்கு அறிக்கைப் போரும் விட்டு பஸ்ஸில் ஆட்களை அழைத்துக் கொண்டு லண்டனுக்கும் அழைத்துச் சென்றிருந்தனர்.
வன்னியில் யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையிலும் இந்த அவைகள் பேரவைகள் எல்லாம் உண்ணாவிரதம் போராட்டம் என்று புலிக்கொடியையும் புலித்தலைவரின் படத்தையும் வைத்து ஆட்டிய ஆட்டத்தில் முள்ளிவாய்க்காலில் நம் மக்கள் ஆட்டம் கண்டு கை இழந்து கால் இழந்து உயிரிழந்து உறவிழந்து இருப்பிடம் இழந்து உண்ண உணவின்றி பருக நீரின்றி நந்திக்கடல் வழி நடந்து வந்து சரணாகதி அடைந்த காட்சி இன்றும் மனதை நெருடுகின்றது . இவர்களின் போராட்டங்களை யார் கண்டு கொண்டார்கள்.
போதாக்குறைக்கு புலம்பெயர்நாடுகளின்; தெருக்களை நாறவைத்து தமக்கு புகலிடம் தந்த நாடுகளிற்கான பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்க வைத்தது தான் அவர்கள் செய்த கைங்கரியம்.
மே 18 உடன்; பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு எல்லாமே ஓய்ந்திருந்தது. ஆனால் புலத்தில் புலிப்பினாமிகளுக்குள் பிரிவுகள் பிளவுகள் ஏற்பட்டன. மக்கள் அவை என்றார்கள். வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு என்றார்கள். தமிழீழ அரசாங்கம் என்றார்கள். இவற்றை எல்லாம் புலம்பெயர் நாடுகளில் பேசிக்கொண்டிருந்தால் தான் இங்கு வாழும் மாக்கள் தொடர்ந்து பணம் கொடுப்பார்கள்.

கறக்கவேண்டியதை எப்போதுமே அங்கு வாழும் மக்களைச் சொல்லி கறந்து கொள்ளலாம் என்பது புலிப்பினாமிகளுக்கு புதிதானதல்ல.
இவற்றுடன் இங்கிருந்து கொண்டு கொக்கரிக்கும் புலிப்பினாமிகளின் ஊடகங்களும் இணையத்தளங்களும் லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக வெளியிட்ட செய்திகள் அப்பாடா கற்பனையின் உச்சத்திற்கே சென்றிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

ஒக்ஸ்போர்ட் நகரின் டோச்செஸ்டர் விடுதிக்கும் பிரித்தானிய இலங்கைத் தூதரகத்திற்கும் இடையில் புலிப்பினாமிகள் புலிக்கொடியை தூக்கிக் கொண்டு ஆடிய ஆட்டம் என்ன, விசில் ஒலிகள் கூட விண்ணைப் பிளந்ததை புலிஊடகங்கள் நேரலையாய் ஒலிக்கச் செய்தன.
கையில் புலிக்கொடிகளை வைத்திருந்த இளையதலைமுறைகளுக்கு இலங்கையில் என்ன நடக்கின்றது. நாம் எதற்காக இங்கு ஆர்ப்பாட்டம் செய்கின்றோம்? வன்னியில் என்ன நடந்தது. இவை போன்ற குறைந்த பட்ச அரசியல் நிலவரங்கள் கூட தெரியாத சிறுசுகள் ஆட்டுவித்தார் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா என்ற ரீதியில் ஒரு மந்தை கத்தினால் எல்லா மந்தைகளும் அந்த வழியை கடைப்பிடிப்பது போன்றே செயற்பட்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவுகள் இலங்கை மண்ணில் அங்கு வாழும் தமிழர்களுக்கு எத்தனை பின்விளைவுகளை உண்டாக்கும் என்பதை யாரும் கருத்திற்கொண்டதாக தெரியவில்லை.இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகளுக்கு பிரிட்டிஸ் போறம் தரப்பில் பெருந்தொகை நிதி செலவிடப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. அவுஸ்திரேலியாவிலிருந்து கூட நிதிபெறப்பட்டதாக பிரிட்டிஸ் போறத்தின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.இந்த நிதிவளங்களை முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கோ அல்லது இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கோ செலவு செய்திருக்கலாம்.
இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு . சுயாதீனமான முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரத்தை ஜனாதிபதி பெற்றுள்ளார்.
இன்றைய நிலையில் அங்கு வாழும் நம் மக்கள் யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி தமது வாழ்வாதாரங்களை இழந்து இடைத்தங்கல் முகாம்களிலும் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு முகாம்களிலும் அரசின் தயவை எதிர்பார்த்து தங்கள் காலத்தை கழிக்கின்றார்கள்.

நாம் புலம்பெயர் தேசத்தில் செய்த ஆர்ப்பாட்டம் அவர்களுக்கான நல்வாழ்வுக்கு பாரிய இடைய+றை ஏற்படுத்தலாம் என்றே இலங்கை வாழ் அரசியல் அவதானிகளால் நோக்கப்படுகின்றது
அங்கு வாழும் மக்கள் தங்களை நிம்மதியாக வாழவிடும்படி தான் கேட்கின்றார்கள். அங்குள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய உரிமை அவர்களுக்குத் தான் உள்ளது. இங்கு வாழும் நாம் அவர்களது உரிமைகளை தீர்மானிப்பதற்கு அருகதையற்றவர்கள்.

காரணம் அதன் விளைவுகள் உங்களை சென்றடையப் போவதில்லை. அங்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்கவேண்டியவர்கள் அவர்களே தான்.
ஜனாதிபதி இலங்கை சென்றடைந்தவுடன் கொழும்பில் இரு பாரிய ஆர்ப்பாட்டங்கள் அஸ்வர் தலைமையிலும் விமல் வீரவன்ச தலைமையிலும் நடைபெற்றிருக்கின்றது. இவற்றின் தொடர்ச்சி அங்குள்ள தமிழர்களுக்கு என்ன வடிவில் தொடருமோ என்பது வினாவாக தொக்கி நிற்கின்றது லண்டனில் நடைபெற்ற இந்த புலியாட்டம் தொடர்பாக இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சியில் இது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றபோது இலங்கையிலிருந்து கலந்து கொண்டவர்கள் அங்குள்ள நிலைமைகளை இங்குள்ள புலம்பெயர் மக்களே குழப்பமடையச் செய்கின்றார்கள் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக தாம் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற தமது அச்சநிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இதேவேளை புலிகளில் ஒரு பிரிவினர் கூட இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் அவர்கள் முன்னாள் போராளிகளின் நல்வாழ்விலும் மாவீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்விலும் கவனம் செலுத்துவதற்கு தம்மாலியன்ற பணியைச் செய்யவேண்டும் என்ற நோக்கில் உள்ளார்களாம்.
லண்டன் புலிப்பினாமிகள் ஆர்ப்பாட்ட நிகழ்வில் புலிக்கொடிகளை ஏந்தியிருந்ததை புலி ஊடகங்கள் தமிழீழ தேசியக்கொடியை ஏந்தியிருந்ததாகக் கூட குறிப்பிட்டார்கள். இதற்குப் பதிலாக முள்ளிவாய்க்கால் அவலத்தில் நமது மக்கள் பட்ட துன்பக்காட்சிகளை ஏந்தியிருக்கலாம் அல்லவா? அது பார்ப்போர் மனதில் கழிவிரக்கத்தையாவது ஏற்படுத்தியிருக்கும்.
புலிக்கொடியை விமானநிலையத்தில் கண்ட வெளிநாட்டுப் பயணிகள் பயங்கரவாதிகளின் ஆர்ப்பாட்டம் என்றே நினைத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
ஜனாதிபதியின் விஜயத்தின்போது லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக ‘சிறிலங்கா கார்டியன்’
இணையத்தளத்தில் டயா ரணசிங்க பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தளத்தில் டயா ரணசிங்க பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஆக்கபூர்வமாக அவர்களால் எதனையும் செய்துவிடமுடியாது.
இவர்களில் பலர் வியாபார நிலையங்களிலும், மக்டொனால்டிலும், பல்பொருள் அங்காடிகளிலும், எரிபொருள்நிரப்பு நிலையங்களிலும் பணிசெய்கிறார்கள்.
இவர்கள் இதுபோன்ற போராட்டங்களுக்குத் தயார் நிலையில் எப்போதுமே புலிக்கொடியையும் ரிசேட்களையும் வைத்திருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இதுபோல
போராட்டங்களில் ஈடுபடுவது ஒரு சுற்றுலாப் பயணம். அவ்வளவுதான்.

குறுகிய நேரத்தில் குறித்ததொரு இடத்தில் ஆயிரக்கணக்கில் திரளக்கூடியவாறு இவர்கள் உள்ளார்கள். கடந்த பல ஆண்டுகளாக புலிகளின் செயற்பாட்டாளர்களிடமிருந்து பெற்ற பயிற்சிதான் இது. இந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் வன்னியிலிருந்து தப்பிச்சென்ற சிலநூறு ஆயுதப் பயிற்சிபெற்ற போராளிகளும் உள்ளார்கள். ஆதலினால் சந்தர்ப்பம் கிடைக்குமிடத்து தமக்குப் பயிற்றுவிக்கப்பட்டது எதுவோ அதனை செய்யாமல் இந்த முன்னாள் போராளிகள் விடமாட்டார்கள்.
அவர் புலம்பெயர் தமிழர்களை சரியாகத் தான் கணிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இனியாவது இந்த புலம்பெயர் புலிப்பினாமிகள் அங்குள்ள மக்களுக்காக இங்கு ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தாமல் ஆக்கப+ர்வமாக அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக