மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த டத்தோ சாமிவேலு தன் பதவியை ராஜினாமா செய்தார்.
மலேசியாவில் ஆளும் கூட்டணியில் உள்ள 13 கட்சிகளில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் ஒன்று ஆகும். மலேசியா 1957-ம் ஆண்டு விடுதலை அடைந்தது முதல் இந்த கூட்டணி தான் நாட்டை ஆண்டு வருகிறது.
மலேசிய இந்திய காங்கிரஸ் இந்தியர்களுக்கான நலன்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் ஆகும். இதன் தலைவராக 1979-ம் ஆண்டு பதவிக்கு வந்தவர் டத்தோ சாமிவேலு. இவர் அதன் பிறகு அந்த கட்சியின் அசைக்க முடியாத தலைவராக இருந்தார். தொடர்ந்து 30 ஆணடுகளுக்கு மேலாக அவர் இந்த பதவியில் நீடித்து வருகிறார். இந்த கட்சி சார்பில் சாமிவேலு மலேசிய அரசாங்கத்திலும் மந்திரியாக இடம் பெற்று இருந்தார்.
2008-ம் ஆண்டு தேர்தலின் போது இந்தியர்களின் உரிமைகளை பாதுகாக்க தவறி விட்டார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் அந்த கட்சிக்கு போதுமான அளவுக்கு வெற்றி பெற தவறி விட்டது.
222 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 4 இடங்களில் மட்டும் தான் மலேசிய இந்திய காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த காலங்களில் இந்த கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. சாமிவேலுவே தோல்வி அடைந்தார்.
அதுவரை அவர் மலேசிய அரசில் பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்த அவர் இந்த தோல்விக்கு பிறகு அவர் மந்திரி பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சாமிவேலு திங்கள்கிழமை (06.12.2010) தலைவர் பதவியில் இருந்து விலகினார். நேரம் வந்து விட்டது. தலைமையில் மாற்றம் வேண்டும். இனிமேல் நான் கட்சி தலைவர் இல்லை என்று அவர் கூறினார். 74 வயதான அவர் கட்சி தலைமை பதவியை முறைப்படி துணைத்தலைவர் ஜி.பழனிவேலுவிடம் ஒப்படைப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக