ஆங்கில மொழி மேற்கு நாடுகளுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ சொந்தமான மொழி என்ற உணர்வு இனி மேலும் நிலைத்திருப்பதற்கான அவசியம் இல்லை.
21வது நூற்றாண்டில் ஆங்கில மொழி எந்தவொரு தனிப்பட்ட நாட்டிற்கோ, உபகண்டத்திற்கோ அல்லது கண்டத்திற்கோ சொந்த மான மொழியும் அல்ல. ஆங்கிலம் ஒரு உலக மொழியாகவும் இலங்கையில் இந்நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு தொடர்பு மொழியாகவும் இருந்து வருகிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிப் பயிற்சி பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி அஸாந்த யூ அத்த நாயக்க எழுதியிருக்கும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் இந்த தக வல்களை வெளியிட்டு இருக்கிறார்.
மஹிந்த சிந்தனையின் எண்ணக்கருவுக்கு அமைய, இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் 2020 ஆம் ஆண்டுக்குள் ஆங்கில மொழி யில் நல்ல தேர்ச்சியை அளிப்பது அவசியம் என்ற கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆங்கில மொழி அறிவு சிறிதேனும் இல்லாத ஒருவருக்கு முதலில் ஆங்கில அறிவை புகட்ட வேண்டுமாயின், ஆசிரியர்கள் அவர்கள் மனதில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் அவசியமாகும்.
முதலில் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழிச் சொற்களை பரிச்சயப்படுத்திய பின்னர் அவர்களை சிறிது சிறிதாக ஆங்கிலத்தில் ஓரிரு வசனங்களை பேசுவதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்குப் பின்னரே ஆங்கில சொற்பதங்களையும் தவறின்றி அவர்கள் எழுதுவதற்கான இலக்கண அறிவையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கலாநிதி அத்தநாயக்க தமது இந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
1950வது, 1960வது தசாப்தங்களில் இருந்தது போன்று இனிமேலும் ஆங்கில மொழிக் கல்வியை எமது மாணவர்கள் புறக்கணிக்காமல் அதற்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் அவசியமாகும். ஆங்கிலம், எமது நாட்டின் ஒரு இணைப்பு மொழியாக இருப்பதனால், எமது கலாசார பாரம்பரியங்களுக்கு தீங்கு இழைக்காத வகையில், ஆங்கில மொழியை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் ஆங்கில அறிவில் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியாவில் இன்று, சகல மாநிலங்களிலும் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு, ஆங்கிலத்தின் மூலம் சகல பாடங்களையும் கற்றுக்கொடுக்கும் நடை முறை பின்பற்றப்படுகிறது. இதனால்தான் இந்தியர்கள் இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் முழு உலகிலேயே முன்னணியில் திகழ்ந்து வருகிறார்கள்.
இன்று அமெரிக்காவின் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இந்திய விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருவது ஆசியாவைச் சேர்ந்த நாம் அனைவரும் பெருமைப்பட வேண் டிய ஒரு புதிய மாற்றமாகும். அதுபோன்று, இலங்கை மக்களும் உலகில் கல்வித்துறையில் முன்னிலைக்கு வரவேண்டுமாயின் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், எமது நாட்டின் மாணவ, மாணவிகளுக்கு தங்கள் தாய்மொழிகளான தமிழையும், சிங்களத்தையும் கற்றுக்கொள்வதற்கும் சகல வசதிகளையும் கல்வி யமைச்சு இப்போது பெற்றுக்கொடுத்து வருகிறது. ஆங்கில மொழி யறிவு இருக்கும்போது, எமக்கு வெளிநாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வற்கும் வெளிநாடுகளின் நிகழ்வுகளை இலகுவில் புரிந்துகொள்வதற்கும் வசதியாக இருக்கும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த ஆரம்பத்தில் இங்கு செல்வச் செருக்கோடு வாழ்ந்த பல தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் தங்கள் தாய்மொழியை முற்றாக மறந்து, கறுப்பு இன வெள்ளையர்கள் என்ற போலி கெளரவத்துடன் வீட்டில் கூட பிள்ளைகளுடன் தங்கள் தாய்மொழியில் பேசாமல், ஆங்கிலத்தில் மாத்திரமே பேசும் பழக்கத்தை கையாண்டு வந்தார்கள்.
ஆனால் மஹிந்த சிந்தனை எண்ணக்கரு அதனை எவ்விதத்திலும் ஆதரிக் கவில்லை. ஆங்கில மொழி அறிவில் எமது நாட்டவர்கள் முன்னணியில் திகழ்ந்தாலும் தங்கள் தாய்மொழிகளான தமிழுக்கும், சிங்களத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, எங்கள் கலாசார பாரம்பரியங்களுக்கு அமைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்த லட்சியக் கனவை நிறைவேற்றுவதற்காக, கல்வியமைச்சும், உயர்கல்வியமைச்சும் இன்று ஆங்கில மொழிப் போதனைக்கு முக்கியத்துவம் அளித்து, எமது நாட்டின் இளம் சந்ததியினரை இன்னும் ஓரிரு ஆண்டு களுக்குள் சர்வதேச ரீதியில் எங்கள் தாய்நாட்டிற்கு பெருமையை பெற்றுக்கொடுக்கக் கூடிய தன்னிகரற்ற கல்விமான்களாக உருவாக் குவதற்கு திடசங்கற்பம் பூண்டிருப்பது, இந்நாட்டு மக்கள் அனை வரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.