செவ்வாய், 7 டிசம்பர், 2010

யாழில் சேதமடைந்துள்ள வீதிகளால் பாரவூர்திகள் பயணிப்பது ஆபத்தானது - அரச அதிபர் அறிவிப்பு


யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வீதிகளின் நிலை மோசமாக உள்ளது. இத்தகைய நிலை யில் பார ஊர்திகள் பயணிப்பது மேலும் வீதி களைப் பாதிப்பதோடு ஆபத்தான நிலையும் ஏற்பட வாய்ப்பு உண்டு என யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பாக யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலர்கள், கிராம சேவை யாளர்கள் மற்றும் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள்,அனர்த்த விடயங்களோடு தொடர்புடைய உத்தியோகத்தர்களோடு நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், சில பகுதிகளில் வீதிகள் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இவைதவிர பாலங் கள் திருத்தப்பட்டும் வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் பார ஊர்திகள் அந்த வீதிகளால் பயணித்தால் சேதம் அதிகரித்துவிடும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் பண்ணை வீதி, சாவ கச்சேரி வீதி போன்றவற் றில் ஆபத் தான பகுதிகளை மிக விரைவில் செப் பனிட்டுத் தரும்படியும் இவற்றுக்கு மாற் றுப் பாதைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளேன். இவை தவிர பார ஊர்திகள் பயணிக் கக் கூடிய பாதைகளை சரிவர இனங்கண்டு அவற்றினை பயணிக்க இலகுவான வகையில் வீதிக் குறி யீடுகள் மூலம் போக்கு வரத்தை இலகுபடுத்த வேண்டும். மருதங்கேணி, இயக்கச்சி, புல்லா வழி பகுதிகளில் உள்ள வீதிகள் முற்றாக சேதமுற்று காணப்படுகிறது. இவைதவிர நாகர்கோவில் பகுதிக்கு செல்லும்பாதை தொடர்பாக படையினரிடம் கேட்கப்பட்டது. அவர்கள் அப்பாதையில் பய ணிப்பதில் ஆபத்துள்ளதாக தெரிவிக் கின்றனர்.

அந்தப்பகுதியில் முற்றாக மிதிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற காரணத்தால் அவர்கள் பய ணிக்க அனுமதி மறுத்துவிட்டனர்.இதேவேளை வீதியோரங்களில் உள்ள மரங்களினால் பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன. காரணம் சூறாவளி போன்ற இயற்கை அனர்த் தங்கள் ஏற்பட்டால் இவை வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். இதேவேளை தொலைபேசி, மின்கம்பங்களினாலும் விளம்பரப் பதாகைகளினாலும் பாதிப்பு ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன என அவர் தெரிவித்தார்
.

கருத்துகள் இல்லை: